உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / வங்கி மற்றும் நிதி / கோ பர்ஸ்ட் திவால் நடவடிக்கை; மீண்டும் அவகாசம் நீட்டிப்பு

கோ பர்ஸ்ட் திவால் நடவடிக்கை; மீண்டும் அவகாசம் நீட்டிப்பு

புதுடில்லி: 'கோ பர்ஸ்ட்' விமான நிறுவனம் திவால் நடைமுறையை முடிக்க, என்.சி.எல்.டி., எனும் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம், நான்காவது முறையாக கால அவகாசம் வழங்கியுள்ளது. இதன்படி, வரும் ஆகஸ்ட் 3ம் தேதிக்குள், கோ பர்ஸ்ட் திவால் நடை முறைகளை முடிக்க வேண்டும். கிட்டத்தட்ட 6,200 கோடி ரூபாய்க்கும் அதிகமான கடனில் சிக்கி உள்ளது கோ பர்ஸ்ட். கடந்தாண்டு மே மாதம் முதல், நிறுவனத்தின் விமானங்கள் இயக்கப்படுவதில்லை. இந்நிலையில் கடந்தஆண்டு நவம்பர் மாதத்துடன் முடிவடைந்த திவால் நடைமுறைக்கான கால அவகாசத்தை, முதல் முறையாக நடப்பாண்டு பிப்ரவரி மாதம் 4ம் தேதி வரை நீட்டித்து தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. பின்னர், இது ஏப்ரல் 4ம் தேதி வரையும், அதன்பின் ஜூன் 3ம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டது.தற்போது நான்காவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவே கடைசி நீட்டிப்பு என தீர்ப்பாயம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதன் பின், நிறுவனத்தின் சொத்துக்கள் அனைத்தும் விற்கப்பட்டு, கடனை அடைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.திவால் நடவடிக்கைகள் துவங்கப்பட்டதிலிருந்து, 330 நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். கோ பர்ஸ்ட் நிறுவனத்தைப் பொறுத்தவரை, இந்த காலக்கெடு கடந்த ஏப்ரல் மாதத்துடன் முடிவடைந்துவிட்டது. எனினும், நிறுவனத்தை மீண்டும் செயல்பட விட வேண்டும் என்ற நோக்கத்தில், தீர்ப்பாயம் தன் அதிகாரத்தை பயன்படுத்தி, கால அவகாச நீட்டிப்பு வழங்கி வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை