| ADDED : ஜூலை 12, 2024 12:25 AM
சென்னை: அதானி காட்டுப் பள்ளி துறைமுகத்தின் சமூக மேம்பாட்டு துறை, திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகில், திருமலை நகரில், அதானி திறன் மேம்பாட்டு மையத்தை அமைத்து உள்ளது.இந்த மையத்தில், 11 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயன்பெறும் வகையில், 'டேலி இ.ஆர்.பி - 9' மற்றும் தையல் பயிற்சி போன்றவை கற்று தரப்படுகின்றன.இதன் வாயிலாக, ஆண்டுக்கு 240 பேர் பயனடைவர். மேலும், மக்கள் தங்கள் வாழ்வில் நிரந்தர வருவாய் ஈட்டி, சுய முன்னேற்றம் அடைய, திறன் மேம்பாட்டு மையத்தில் வழிகாட்டப்படுகிறது.திறன் மேம்பாட்டு மைய திறப்பு விழாவில், திருவள்ளூர் மாவட்டம், சார் - ஆட்சியர் வஹே சங்கீத் பல்வந்த், பொன்னேரி எம்.எல்.ஏ., துரை சந்திரசேகர், அதானி காட்டுப்பள்ளி துறைமுக தலைமை அதிகாரி மதன்மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.