| ADDED : ஜூலை 14, 2024 12:52 AM
சென்னை:நகரங்களில், உற்பத்தி சார்ந்த தொழில் நிறுவனங்களால் அதிக மாசு ஏற்படுகிறது. இதனால், இந்நிறுவனங்கள் புறநகருக்கு இடம்பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு இடம்பெயர விரும்பும் நிறுவனங்களுக்கு, புதிய இடத்தில் தொழில் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த, மானியம் வழங்கப்படுகிறது. திட்ட மதிப்பில், 75 சதவீதம் அல்லது அதிகபட்சம் 20 கோடி ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது.இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தனியார் தொழிற்கூடங்கள், நகரங்களுக்கு வெளியில் இடம்பெயர செய்யும் திட்டத்தில், குறைந்தபட்சம், 10 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும் என்று இருந்தது. ஆனால், மாநிலம் முழுதும் நிலத்தின் மதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே, தொழில் நிறுவனங்கள் பயன்பெற, கடந்த நிதியாண்டில் குறைந்தபட்ச அளவு இரண்டு ஏக்கராக குறைக்கப்பட்டது. இதனால், பல தொழில் நிறுவனங்கள், நகருக்கு வெளியே இடம்பெயர முன்வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.