உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / வரி கணக்கு தாக்கல் 15 நாளில் 4 கோடி படிவங்கள் ஆய்வு

வரி கணக்கு தாக்கல் 15 நாளில் 4 கோடி படிவங்கள் ஆய்வு

புதுடில்லி:கடந்த நிதியாண்டுக்காக தாக்கல் செய்யப்பட்ட வருமான வரிக் கணக்குகளில் 4 கோடி படிவங்களை, 15 நாட்களில் வருமான வரித் துறை ஆய்வு செய்து உள்ளது.ஜூலை 31ம் தேதி வரை கடந்த நிதியாண்டுக்கு 7.28 கோடி வருமான கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில் 4.98 கோடி கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு, வரிசெலுத்துவோருக்கு தகவல் அனுப்பப்பட்டது. அதில் 3.92 கோடி கணக்குகள் 15 நாட்களில் வருமான வரித் துறை அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டன. கடந்த 10 ஆண்டுகளில், நேரடி வரி வசூல் 5.59 லட்சம் கோடியில் இருந்து சுமார் 20 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது. ஜி.டி.பி.,யுடன் ஒப்பீட்டில் வரி வசூல் விகிதம் 5.6 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக உயர்ந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை