மேலும் செய்திகள்
உலகளாவிய நிறுவனங்களை இந்தியர்களால் உருவாக்க முடியும்
12 hour(s) ago
சீன சோலார் உதிரிபாகம்: வரி விதிக்க விசாரணை
12 hour(s) ago
எண்கள்
12 hour(s) ago
ஜி.எஸ்.டி., புகார் மீது தீர்வு காண குழு
01-Oct-2025
மும்பை: நடப்பாண்டு ஜனவரியில், ஆஸ்திரேலியாவுக்கான இந்திய சுற்றுலா பயணியரின் எண்ணிக்கை 6 சதவீதம் அதிகரித்துள்ளதாக, ஆஸ்திரேலியா சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மேலும் தெரிவித்ததாவது: கடந்த 2019ம் ஆண்டு 7வது இடத்தில் இருந்த இந்தியர்களின் வருகை, நடப்பாண்டு ஜனவரியில் 5வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. கடந்த ஜனவரியில் 26,200 இந்தியர்கள் ஆஸ்திரேலியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். கடந்த 2019ம் ஆண்டு இதே மாதத்தில் 24,700 பேர் பயணம் செய்துள்ளனர். இது 6.07 சதவீதம் வளர்ச்சியாகும். கடந்த 2023 பிப்ரவரி முதல் 2024 ஜனவரி மாதம் வரை ஆஸ்திரேலியாவுக்கு வருகை தந்த இந்தியர்களின் எண்ணிக்கை 4.02 லட்சம். புதுடில்லி, பெங்களூரு மற்றும் மும்பையை இணைக்கும் விமானங்களின் எண்ணிக்கை, கடந்த 2019ல் எட்டாக இருந்தது, தற்போது, வாரத்துக்கு 28 விமானங்களாக உயர்ந்துஉள்ளது.நடப்பு ஆண்டிலும் இதே வேகம் தொடரும் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு தெரிவித்துள்ளது.
12 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago
01-Oct-2025