| ADDED : மே 08, 2024 12:57 AM
புதுடில்லி: அலுவலக பணியாளர்களுக்கான பணியமர்த்தல், கடந்த ஏப்ரல் மாதத்தில், 3 சதவீதம் சரிந்ததாக, 'நவுக்ரி' வேலைவாய்ப்பு தள குறியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாட்டில் அலுவலக பணியாளர்களுக்கான வேலை வாய்ப்பு, முந்தைய ஆண்டு ஏப்ரல் மாதத்தை காட்டிலும் கடந்த ஏப்ரலில், 3 சதவீதம் சரிந்துள்ளது. மேலும், கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், 1 சதவீதம் குறைந்துள்ளது.காப்பீடு, சுற்றுலா மற்றும் விருந்தோம்பல், எண்ணெய் மற்றும் எரிவாயு, எப்.எம்.சி.ஜி., ஆகிய துறைகளில், வேலை வாய்ப்பு இரு மடங்கு வளர்ச்சி கண்டிருந்த போதிலும், இந்த சரிவு நிகழ்ந்துள்ளது.அதேசமயம், தகவல் தொழில்நுட்பம், தொலைதொடர்பு மற்றும் போக்குவரத்து ஆகிய துறைகளில், பணியமர்த்தல் கடந்த மாதம் சரிந்துள்ளது.