மேலும் செய்திகள்
ஜோஹோ நிறுவனத்தின் பி.ஓ.எஸ்., சாதனம் அறிமுகம்
9 hour(s) ago
இந்தியா சுவிட்சர்லாந்து ரூ.86,000 கோடி வணிகம்
9 hour(s) ago
அதானி டிபென்ஸ் மீது வரி ஏய்ப்பு விசாரணை
9 hour(s) ago
புதுடில்லி: இந்திய கப்பல் மறுசுழற்சி துறை, நடப்பு நிதியாண்டில், 15 சதவீத வளர்ச்சி காணும் என்று எதிர்பார்ப்பதாக, கடன் மதிப்பீட்டு நிறுவனமான 'கிரிசில்' தெரிவித்துள்ளது.ஆயுட்கால முடிவில் உள்ள கப்பல்கள் திரும்ப பெறப்பட்டு, அவற்றிலுள்ள உலோகம் உள்ளிட்ட பொருட்கள், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றப்படுகின்றன. மேலும், பழைய கப்பல்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளும் தவிர்க்கப்படுகின்றன.நாட்டின் கப்பல் மறுசுழற்சி துறை, கடந்த 2023 மற்றும் 24ம் நிதியாண்டுகளில், முறையே 8.50 மற்றும் 22 சதவீத சரிவை கண்டது. ஆனால், நடப்பு நிதியாண்டில், 15 சதவீத வளர்ச்சியை காணும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆயுட்கால முடிவில் உள்ள கப்பல்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, இந்தியாவின் அதிகப்படியான போட்டி தன்மையினாலும், கப்பல் மறுசுழற்சி துறை வளர்ச்சி அடையும் என்று கருதப்படுகிறது.இத்துறையில், போட்டி நாடுகளான வங்கதேசம், பாகிஸ்தான் ஆகியவை, கடுமையான அன்னிய நாணய தட்டுப்பாட்டை எதிர்கொள்வதால், பழைய கப்பல்களின் கொள்முதல் அங்கு தாமதம்ஆகிறது. இதனால், கப்பல் உரிமையாளர்கள், இச்சந்தைகளை தவிர்க்கவும், இந்தியாவை அணுகவும் அதிக வாய்ப்பு உள்ளதாக கிரிசில் தெரிவித்துள்ளது.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago