மேலும் செய்திகள்
ஜோஹோ நிறுவனத்தின் பி.ஓ.எஸ்., சாதனம் அறிமுகம்
7 hour(s) ago
இந்தியா சுவிட்சர்லாந்து ரூ.86,000 கோடி வணிகம்
8 hour(s) ago
அதானி டிபென்ஸ் மீது வரி ஏய்ப்பு விசாரணை
8 hour(s) ago
புதுடில்லி:'அல்ட்ராடெக் சிமென்ட்' நிறுவனம், 'இந்தியா சிமென்ட்ஸ்' நிறுவனத்தின் 23 சதவீத பங்குகளை, 1,885 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.'ஆதித்ய பிர்லா' குழுமத்தைச் சேர்ந்த அல்ட்ராடெக் நிறுவனம், 15.30 கோடி டன் ஆண்டு உற்பத்தி திறனுடன், இந்தியாவின் முன்னணி சிமென்ட் நிறுவனமாக உள்ளது. இதே தொழிலில் ஈடுபட்டு வரும் அதானி குழுத்தின் 'அம்புஜா சிமென்ட்ஸ்' நிறுவனமும், 'பென்னா சிமென்ட் இண்டஸ்ட்ரீஸ்' என்ற நிறுவனத்தை, 10,422 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்துவதாக சமீபத்தில் அறிவித்தது.'டிமார்ட்' நிறுவனத்தின் தலைவர் ராதாகிஷன் தமானி, தன் வசம் இருந்த அனைத்து இந்தியா சிமென்ட் நிறுவன பங்குகளையும் அல்ட்ராடெக் இடம் விற்று விட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.அதிகரித்து வரும் உள்கட்டமைப்பு திட்டங்கள் காரணமாக, சிமென்ட் விற்பனை அதிகரித்து வருவதை அடுத்து, இத்துறையில் கையகப்படுத்துதல் நடவடிக்கைகள் அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.
7 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago