உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / பிரின்டட் சர்க்யூட் போர்டுகளுக்கு பொருள் குவிப்பு தடுப்பு வரி

பிரின்டட் சர்க்யூட் போர்டுகளுக்கு பொருள் குவிப்பு தடுப்பு வரி

புதுடில்லி:சீனா, ஹாங்காங்கில் இருந்து அதிகளவில் இறக்குமதி செய்யப்படும் 'பிரின்டட் சர்க்யூட் போர்டுகளுக்கு', ஐந்து ஆண்டுகளுக்கு பொருள் குவிப்பு தடுப்பு வரி விதிக்குமாறு, வர்த்தக அமைச்சகம், மத்திய நிதியமைச்சகத்திற்கு பரிந்துரைத்துள்ளது.இது குறித்து வர்த்தக அமைச்சகத்தின் டி.ஜி.டி.ஆர்., எனப்படும் வர்த்தக தீர்வுகளுக்கான பொது இயக்குனரகம் தெரிவித்துள்ளதாவது: டிரான்சிஸ்டர், ரெசிஸ்டர், கெபாசிட்டர் அடங்கிய மின்னணு உதிரிபாகங்கள் இணைக்கப்பட்ட பி.சி.பி., எனப்படும் பிரின்டட் சர்க்யூட் போர்டுகள், கார்கள், போன்கள், தொலைபேசிகள், கணினிகள் உள்ளிட்ட மின்னணு சாதன பொருட்களில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வகை போர்டுகள், சீனா மற்றும் ஹாங்காங்கில் இருந்து அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதனால், உள்நாட்டு தொழில்கள் பாதிக்கப்படுவதால், இதற்கு தடை விதிக்க வேண்டும் என, பிரின்டட் சர்க்யூட் போர்டு உற்பத்தியாளர் சங்கம், அரசுக்கு கோரிக்கை விடுத்தது. இதுகுறித்து, டி.ஜி.டி.ஆர்., ஆய்வு மேற்கொண்டு, இவற்றுக்கு பொருள் குவிப்பு தடுப்பு வரி விதிக்க மத்திய அரசுக்கு பரிந்துரைத்து உள்ளது. இந்த வரி விதிப்பால், வாடிக்கையாளர்களுக்கு சர்க்யூட் போர்டுகள் கிடைப்பதில் எந்த ஒரு தடங்கலும் ஏற்படாது என, அமைச்சகம் தெரிவித்துள்ளது. டி.ஜி.டி.ஆர்., பரிந்துரையின் மீது, மூன்று மாதங்களுக்குள் இறுதி முடிவை மத்திய நிதி அமைச்சகம் எடுக்கும் என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை