மேலும் செய்திகள்
கேப்பிடல்மைண்டு லிக்விட் பண்டு அறிமுகம்
3 minutes ago
விலை நிலவரம்
23 hour(s) ago
அடுத்த ஆண்டு இறுதிக்குள், மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 1,07,000 புள்ளிகளை எட்ட வாய்ப்புள்ளதாக, சர்வதேச முதலீட்டு நிறுவனமான, 'மோர்கன் ஸ்டான்லி' கணித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது: நடப்பாண்டில், இந்திய பங்குச் சந்தைகள் மந்தமாக இருந்த நிலையில், அடுத்த ஆண்டில் மீண்டும் உயர்வதற்கான அடிப்படை வலுவாக அமைந்திருக்கிறது. அடுத்த ஆண்டு டிசம்பருக்குள், 95,000 முதல் 1,07,000 புள்ளிகளுக்குள் சென்செக்ஸ் வர்த்தகமாக சாத்தியகூறுகள் இருக்கின்றன. தற்போதைய நிலையில் இருந்து 13 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளது. உள்நாட்டில், மியூச்சுவல் பண்டுகள் தொடர்ச்சியாக முதலீடு செய்து வருவது, சந்தைக்கு பெரிய பலத்தைக் கொடுத்து வருகிறது. இந்திய பங்குச் சந்தைகள், வெளிநாட்டு முதலீடுகளை சார்ந்து இருப்பது குறைந்து உள்ளது. அன்னிய முதலீட்டாளர்கள் மீண்டும் வர வாய்ப்பு உள்ளது. வரும் 2028ம் ஆண்டு வரை, நிறுவனங்கள் ஆண்டுக்கு 17 முதல் 19 சதவீதம் வரை லாபத்தை ஈட்ட வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. பணவீக்கம் குறைவு, ரிசர்வ் வங்கியின் கடன் வட்டி விகித குறைப்பு மற்றும் அரசின் கொள்கைகளால், இந்திய பொருளாதாரம் ஸ்திரத்தன்மையுடன் இருப்பது, சந்தையில் அபாயங்களைக் குறைத்துள்ளன. அதேநேரம், உலகளாவிய பொருளாதார மந்தநிலை, கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் விலை 100 டாலரை தாண்டுவது போன்றவை ஏற்பட்டால் அது, இந்திய பங்கு சந்தைகளுக்கு சவாலாக அமையலாம். மிக மோசமான அளவில் பொருளாதார சூழல்கள் ஏற்படின், சென்செக்ஸ் 76,000 புள்ளிகள் வரை கீழே சரிய வாய்ப்புள்ளது. இவ்வாறு மோர்கன் ஸ்டான்லி தெரிவித்து உள்ளது. மற்றொரு ஆய்வு நிறுவனமான கோல்டுமேன் சாக்ஸ், அடுத்த ஆண்டு இறுதிக்குள் நிப்டி 29,000 புள்ளிகளை எட்ட வாய்ப்புள்ளதாக கணித்திருப்பதும் கவனிக்கதக்கது. மிக மோசமான அளவில் பொருளாதார சூழல்கள் ஏற்படின், சென்செக்ஸ் 76,000 புள்ளிகள் வரை கீழே சரிய வாய்ப்புள்ளது. பொருளாதார வளர்ச்சிக்கான அரசின் கொள்கைகள் ரிசர்வ் வங்கியின் கடன் வட்டி விகித குறைப்பு, ரொக்க இருப்பு விகித குறைப்பு வங்கிகளில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தும் நடவடிக்கைகள் சந்தைக்கான பணப்புழக்கத்தை அதிகரிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் ஜி.எஸ்.டி., மற்றும் வருமான வரி சீர்திருத்தங்கள் பொதுத் துறை மூலதனச் செலவினங்களை அதிகரித்தல் எந்த துறை எப்படி இருக்கும்? சிறப்பு: *நுகர்வோர் செலவினங்கள் துறை *நிதிச் சேவைகள் துறை *தொழில் துறை நடுநிலை: தகவல் தொழில்நுட்பம் நுகர் பொருட்கள் தகவல் தொடர்பு சேவைகள் குறைந்த மதிப்பீடு: *எரிசக்தி *சுகாதாரம் *மூலப்பொருட்கள்
3 minutes ago
23 hour(s) ago