உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 2 சிடி தொழிற்சாலை பா.ஜ., எத்னால் கிண்டல்

2 சிடி தொழிற்சாலை பா.ஜ., எத்னால் கிண்டல்

தாவணகெரே: ''கர்நாடகாவில் 'சிடி' தயாரிக்கும் இரண்டு தொழிற்சாலைகள் உள்ளன,'' என பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் தெரிவித்தார்.தாவணகெரேவில் நேற்று அவர் கூறியதாவது:ம.ஜ.த., - எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா வழக்கை மூடி மறைக்க, முயற்சி நடக்கிறது. உள் ஒப்பந்த அரசியல்வாதிகள் இடையே, சதி திட்டம் நடந்துள்ளது.காங்கிரஸ் அரசு உத்தரவிட்ட எந்த விசாரணைகளும் முழுமை அடைந்தது இல்லை. எஸ்.ஐ., நியமன ஊழல் விசாரணை கிடப்பில் போடப்பட்டுள்ளது.இரண்டு 'போக்சோ' வழக்குகள் பாக்கியுள்ளது. எஸ்.ஐ.டி.,யில் அரசு அதிகாரிகளே இருப்பதால், சரியாக விசாரணை நடப்பது இல்லை. எனவே சி.பி.ஐ., க்கு ஒப்படைக்க வேண்டும் என, நான் வலியுறுத்துகிறேன்.கர்நாடகாவில் 'சிடி' தயாரிக்கும் இரண்டு தொழிற்சாலைகள் உள்ளன. ஒன்றின் பெயரை குமாரசாமி கூறியுள்ளார். மற்றொரு தொழிற்சாலையின் பெயரை, மே 8ல் நான் பகிரங்கப்படுத்துவேன், இந்த இரண்டு குடும்பங்களும் சேர்ந்து, மாநில அரசியலை அசுத்தமாக்கியுள்ளன.இவ்வாறு அவர்கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி