உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / "ஒவ்வொரு ஓட்டும், ஒவ்வொரு குரலும் முக்கியம்" - பிரதமர் மோடி

"ஒவ்வொரு ஓட்டும், ஒவ்வொரு குரலும் முக்கியம்" - பிரதமர் மோடி

புதுடில்லி: ஒவ்வொரு ஓட்டும் ஒவ்வொரு குரலும் முக்கியமானது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்த பதிவை தமிழ் உட்பட அனைத்து மொழிகளிலும் எக்ஸ் சமூகவலைத்தளத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். இது குறித்து எக்ஸ் சமூகவலைளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தல் இன்று துவங்கியது. 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு ஓட்டுப்பதிவு நடந்து வரும் நிலையில், இந்தத் தொகுதிகளில் ஓட்டளிக்கும் அனைவரும் சாதனை அளவை எட்டும் வகையில் தங்களது வாக்குரிமையை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் ஓட்டளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால், ஒவ்வொரு ஓட்டும் ஒவ்வொரு குரலும் முக்கியமானது. இவ்வாறு அந்த அறிக்கையில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

ஜனநாயகத்தை காக்கும் தேர்தல்

இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் ராகுல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இன்று முதல் கட்ட ஓட்டுப்பதிவு. உங்கள் ஓட்டுகள் ஒவ்வொன்றும் இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். ஒவ்வொரு ஓட்டும், அடுத்த தலைமுறையையும் தீர்மானிக்கப் போகிறது என்பதை வாக்காளர்கள் நினைவில் கொள்ளுங்கள். ஜனநாயகத்தை காக்கும் தேர்தல். வெறுப்பைத் தோற்கடித்து ஒவ்வொரு மூலையிலும் அன்பின் கடையைத் திறப்போம்.கடந்த 10 ஆண்டுகளில் தேசத்தின் ஆன்மாவில் ஏற்பட்ட காயங்களுக்கு உங்கள் ஓட்டுகள் மூலம் மருந்தளித்து ஜனநாயகத்தை வலுப்படுத்துங்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் ராகுல் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Indian
ஏப் 19, 2024 12:00

மக்களே , நல்லவர்களுக்கு , நல்ல எதிர்காலத்திற்கு , உங்கள் மனசாட்சி படி வாக்களியுங்கள்


Indian
ஏப் 19, 2024 12:01

மக்களே, நல்லவர்களுக்கு, நல்ல எதிர்காலத்திற்கு, உங்கள் மனசாட்சி படி வாக்களியுங்கள்


Ramesh Sargam
ஏப் 19, 2024 11:46

மக்களின் பணத்தை, நிலத்தை, சொத்துக்களை பற்றியே சிந்திக்கும், அதாவது எப்படி ஆட்டைபோடலாம் என்று சதா சர்வகாலமும் சிந்திக்கும் திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு வாக்கு அளிக்காதீர்கள் மக்களின் நலனுக்காக எப்பொழுதும் உழைக்கும் மோடிக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் வாக்களியுங்கள்


Indian
ஏப் 19, 2024 11:59

நீ சொல்லிவிட்டால் பி ஜெ பி கு வோட்டு போற்றுவோமா ?? நல்லவர்களுக்கு வாக்களியுங்கள் என சொல்லு வாக்களிக்கும் உரிமையை மக்களிடம் விட்டு விடு நீ சொன்ன உடன் யாரும் பி ஜெ பி கு ஒட்டு போட்டு விட போவதில்லை


Indian
ஏப் 19, 2024 12:50

நீ சொல்கிற கட்சிக்கு வாக்களிக்க மாட்டோம்


அசோகன்
ஏப் 19, 2024 10:53

பயோமெட்ரிக் முறையில் ஓட்டு போடவேண்டும் என்பதுதான் பிஜேபி யின் நீண்டநாள் முயற்சி... ஆனால் இந்த திருட்டு கூட்டம் பேயாட்டம் ஆடுது.. அதுவும் பாக்கிஸ்தான் போல் போலிங் நடத்தவேண்டும் என்கிறார்கள்... அதாவது ஓட்டு போடுவதற்கு முன்பே ஓட்டு பேட்டியில் ஓட்டை போட்டு எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள் அங்குள்ள அரசியல்வாதிகள்.. அதுபோல் இருந்தால் கருமம் இந்த மக்களுக்கும் ஓட்டுக்கு காசு கொடுக்கவேண்டியதில்லை என்பதே காங்கிரஸ் திமுகவின் வேண்டுகோள் மற்றும் எதிர்பார்ப்பு


KR india
ஏப் 19, 2024 08:38

ஐயா வணக்கம் தங்கள் ஹாட்ரிக் வெற்றிக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள் தங்கள் அறிக்கையில் கூறியதை அப்படியே கீழே கொடுத்துள்ளேன் "ஒவ்வொரு ஓட்டும் ஒவ்வொரு குரலும் முக்கியமானது இவ்வாறு, பிரதமர் மோடி கூறியுள்ளார்" ஆட்சியில் அசைக்க முடியாத இடத்தில் இருந்த இருக்கும் நீங்கள், ஒவ்வொரு ஓட்டும் போடுவதற்கு உண்டான வழியை ஏற்படுத்தி கொடுத்தீர்களா? இல்லை என்பது என் வாதம் காரணம், வெளி மாநிலத்தில் நிரந்தரமாகவோ, பணிநிமித்தமாகவோ, பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு மட்டும் தபால் மூலம் ஒட்டு வசதி உள்ளது தனியார் துறையில் பணிபுரிபவர்கள், வெளி மாநிலத்தில் வியாபாரம் செய்பவர்கள், வெளி மாநிலத்தில் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் எப்படி ஒட்டு போட முடியும்? அதற்கு நீங்கள் வழி செய்திருந்தால், உங்களுக்கு நிச்சயம் ஒட்டு போட்டிருக்க முடியும் பல கிலோ மீட்டர் பயணித்து ஒட்டு போட நேரமும் இல்லை, ஆர்வமும் இல்லை இதை சரி செய்ய ஒரு யோசனை கூறுகிறேன் ஆதார் கார்டு உள்ளூர் தேவைக்கு, பாஸ்போர்ட் வெளிநாடு பயண தேவைக்கு, டிரைவிங் லைசென்ஸ் வாகன தேவைக்கு இந்த மூன்று அடையாள அட்டைகளை தவிர மற்ற அனைத்து அடையாள அட்டைகளையும் ஒழித்து கட்டுங்கள் அதாவது பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை , ரேஷன் கார்டு போன்றவை நீக்கப்பட வேண்டும் ஆதார் மற்றும் பாஸ்போர்ட் பயோமெட்ரிக் மற்றும் கருவிழி மூலமாகவே வழங்கப் படுவதால், இந்த இரண்டில் ஒன்றை பயன்படுத்தி அருகில் உள்ள, ரெகுலர் ஒட்டு மையத்தில் அல்லது எந்த ஒரு குறிப்பிட்ட வங்கி கிளை ATM-இல் பயோமெட்ரிக் மூலமாக மட்டுமே ஒட்டு பதிவு செய்ய நடவடிக்கை எடுங்கள் வாக்காளர் வெளியூர் பயணங்களில் இருந்தாலும், எந்த ஒரு நகரத்திலும் தங்கள் ஆதார் கைவிரல், கருவிழி அடையாளம் மூலம் ஓட்டளிக்கலாம் நிரந்தர ஒட்டு பதிவு மையம் தவிர, குறிப்பிட்ட வங்கி ATM-இல் கேமரா மற்றும் காவல்துறை பாதுகாப்பு தேவை எத்தனையோ ஐஏஎஸ் படித்த உயர் அதிகாரிகள் இந்த யோசனையை அரசுக்கு தெரிவிக்க என்று வருத்தமாக உள்ளது இந்த கம்ப்யூட்டர் யுகத்தில் இது சாத்தியமே பயோமெட்ரிக் மூலம் ஒட்டு விழுவதால், வேறு இடத்தில் யாரும் கள்ள ஒட்டு போட முடியாது தற்போதுள்ள கற்கால தேர்தல் நடை முறையை மாற்றுங்கள்


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை