உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீதிமன்றங்களில் நேரலை ரூ.180 கோடி ஒதுக்கீடு

நீதிமன்றங்களில் நேரலை ரூ.180 கோடி ஒதுக்கீடு

சட்டம்

l விவசாயிகள் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த தனிநபர்களுக்கு விரைவான நீதி வழங்க, சிவில் நடைமுறை சட்டம் (கர்நாடக திருத்தம்) சட்டம், 2023ஐ இயற்றவும்; கர்நாடக உயர் நீதிமன்ற மற்றும் சிவில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க, கர்நாடக உயர் நீதிமன்ற சட்டம் மற்றும் கர்நாடக சிவில் நீதிமன்ற சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுl கடந்த 2023 - 24ல் நீதிமன்ற கட்டடங்கள் உட்பட உள்கட்டமைப்பு பணிகளுக்காக, 2024 - 25ல் 175 கோடி ரூபாய் ஒதுக்கீடுl அனைத்து நீதிமன்ற நடவடிக்கைகளையும் நேரலையில் ஒளிரப்பவும், நிர்வாக அமைப்பை மேம்படுத்தவும் 94 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. இதற்காக நடப்பாண்டு கூடுதலாக, 180 கோடி ரூபாய் ஒதுக்கீடுl குடகு மாவட்டம், விராஜ்பேட்டையில், புதிய நீதிமன்ற காம்பிளக்ஸ் கட்ட, 12 கோடி ரூபாய் ஒதுக்கீடு. மைசூரில் கட்டுமானப் பணியில் உள்ள அட்வகேட் பவன் விரைவில் கட்டி முடிக்கப்படும்l கர்நாடகாவில் வழக்கறிஞர்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்கவும், அவர்கள் அச்சமின்றி தங்கள் கடமைகளைச் செய்ய வழிவகை செய்யவும், 'வழக்கறிஞர்களுக்கு எதிரான வன்முறையை தடுக்கும் மசோதா, 2023' முன்மொழியப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை