மேலும் செய்திகள்
இயல்பு நிலையில் சபரிமலை ஸ்பாட் புக்கிங் 5,000 ஆனது
45 minutes ago
நக்சல் ஒழிப்பு சாத்தியம்!
1 hour(s) ago
புதுடில்லி: சீனாவிடம் இருந்து நீர்மூழ்கி கப்பல்களை பாகிஸ்தான் வாங்கி வரும் நிலையில், “எந்தவொரு சவால்களை சமாளிக்கவும் நம் நாடு தயார் நிலையில் உள்ளது,” என, கடற்படை துணை தளபதி சஞ்சய் வாத்ஸாயன் தெரிவித்துள்ளார். இறக்குமதி 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கைக்கு பின், நம் நாட்டின் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்காக தன் ராணுவ பலத்தை அதிகரிக்க, அதிநவீன தளவாடங்களை இறக்குமதி செய்து வருகிறது. சீனாவிடம் இருந்து எட்டு நீர்மூழ்கி கப்பல்களை வாங்க, கடந்த 2015ம் ஆண்டிலேயே பாகிஸ்தான் ஒப்பந்தம் போட்டு இருந்தது. அதன்படி நீர்மூழ்கி கப்பல்களை தயாரித்த சீனா, ஒவ்வொன்றாக பாகிஸ்தானுக்கு அனுப்பி வருகி றது. கடந்த ஆண்டு ஏப்ரலில் இருந்து, தற்போது வரை மூன்று நீர்மூழ்கி கப்பல்களை சீனா ஒப்படைத்துள்ளது. 2028க்குள் எஞ்சிய ஐந்து நீர்மூழ்கி கப்பல்களும் பாகிஸ்தான் வசம் ஒப்படைக்கப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், “பாகிஸ்தானின் எந்தவொரு சவாலையும் சமாளிக்கும் வகையில், நம் நாடு தயாராகவே இருக்கிறது,” என, கடற்படை துணை தளபதி சஞ்சய் வாத்ஸாயன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: சீனாவிடம் இருந்து வாங்கிய நீர்மூழ்கி கப்பலை, பாகிஸ்தான் விரைவில் தன் கடற்படையில் சேர்க்கவுள்ளது. எனவே, பாகிஸ்தானின் ஒவ்வொரு அசைவையும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். எந்தவொரு சவாலையும் சமாளிக்கும் வகையில், நம் ராணுவமும் தயார் நிலையிலேயே இருக்கிறது. குறிப்பாக, நீர்மூழ்கி கப்பல்கள் மூலம் நடத்தப்படும் தாக்குதல்களை எப்படி முறியடிக்க வேண்டும் என்பது, நம் கடற்படைக்கு நன்றாகவே தெரியும். தவிர, கடல்வழியாக வரும் தாக்குதல்களை முறியடிப்பதற்கான திறனும், பலமும் நம்மிடம் நிறையவே இருக்கிறது. சீனா வும் தன் கடற்படையை விரிவாக்கம் செய்து வருகிறது. சமீபத்தில், மூன்றாவது விமானம் தாங்கி கப்பல் சீன கடற்படை யில் சேர்க்கப்பட்டுள்ளது. போர் விமானம் எனவே, அதற்கு ஈடுகொடுக்கும் வகையில், நாமும் போர் விமானங்களை உள்நாட்டிலேயே கட்டமைத்து வருகிறோம். அடுத்த இரு ஆண்டுகளுக்குள் அவை நம் கடற் படையில் சேர்க்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். நம் நா ட்டு கடற்படையிடம் தற்போது அணு சக்தியில் இயங்கும் மூன்று நீர்மூழ்கி கப்பல்கள் இருக்கின்றன. இவை, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவை. அதே போல் பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்ட நீர்மூழ்கி கப்பல்களும் உள்ளன .
45 minutes ago
1 hour(s) ago