உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / துப்பாக்கிகளை ஒப்படைக்க போலீசார் உத்தரவு

துப்பாக்கிகளை ஒப்படைக்க போலீசார் உத்தரவு

பெங்களூரு: லோக்சபா தேர்தல் நெருங்குவதால், பொதுமக்கள் தங்களிடம் உள்ள துப்பாக்கிகள், ஆயுதங்களை ஒப்படைக்கும்படி போலீஸ்துறை உத்தரவிட்டுள்ளது.லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளது. விதிமுறை அமலுக்கு வந்துள்ளது. மாநிலம் முழுதும் போலீசார் கண்காணிப்பை பலப்படுத்தியுள்ளனர். அந்தந்த போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள், தாங்கள் வைத்துள்ள துப்பாக்கிகள், ஆயுதங்களை வசப்படுத்தும்படி, உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுஉள்ளனர்.ஒவ்வொரு முறை தேர்தலின் போதும், முன்னெச்சரிக்கையாக ஆயுதங்களை போலீசார் வசப்படுத்துவர். தேர்தல் முடிவு வெளியான பின், உரிமையாளரிடம் ஒப்படைப்பர். முக்கிய புள்ளிகள், தொழிலதிபர்கள் என, பலரும் தங்களின் தற்காப்புக்காக லைசென்ஸ் பெற்று, துப்பாக்கி வைத்துள்ளனர். இதை தேர்தல் முடியும் வரை, போலீஸ் நிலையத்தில் ஒப்படைப்பது கட்டாயம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை