உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / வேகமெடுக்கும் ரயில் பாதை பணிகள்: பட்ஜெட்டில் ரூ.876 கோடி ஒதுக்கீடு

வேகமெடுக்கும் ரயில் பாதை பணிகள்: பட்ஜெட்டில் ரூ.876 கோடி ஒதுக்கீடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மத்திய பட்ஜெட்டில், தமிழகத்தில் நடந்து வரும் புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு, 876 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதால், பணிகள் இனி வேகம் எடுக்கும் என, தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மத்திய பட்ஜெட்டில், தமிழகத்துக்கு மட்டும், 6,362 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், புதிய பாதைகளுக்கு 876 கோடி, அகலப்பாதை திட்டங்களுக்கு 413 கோடி, இரட்டை பாதை திட்டங்களுக்கு 1,162 கோடி, மின்மயமாக்கல் திட்டத்துக்கு, 111 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.திண்டிவனம் - திருவண்ணாமலை புதிய ரயில் பாதை திட்டத்துக்கு, 100 கோடி; திண்டிவனம் -- நகரி 350 கோடி; அத்திப்பட்டு - புத்துார் 50 கோடி; ஈரோடு -- பழனி 100 கோடி; மாமல்லபுரம் - புதுச்சேரி - கடலுார் 25 கோடி; மதுரை - துாத்துக்குடி 100 கோடி; ஸ்ரீபெரும்புத்துார் - இருங்காட்டுக்கோட்டை - கூடுவாஞ்சேரி 25 கோடி; மொரப்பூர் - தர்மபுரி திட்டத்திற்கு 115 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:தமிழக ரயில் திட்டங்களுக்கு 6,362 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு, கடந்த சில ஆண்டுகளுக்கு பின், அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.எனவே, தமிழகத்தில் நடக்கும் ஏழுக்கும் மேற்பட்ட புதிய ரயில் பாதை பணிகளும் இனி வேகம் எடுக்கும். அதேபோல, அனைத்து ரயில் பாதைகளையும் மின்மயமாக்கும் பணி, இந்த ஆண்டில் முடிக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.டி.ஆர்.இ.யு., ரயில்வே தொழிற்சங்க முன்னாள் தலைவர் மனோகரன் கூறியதாவது:தமிழகத்தில் நடக்கும் ரயில் திட்டங்களுக்கு, 35,000 கோடி ரூபாய் தேவை. குறிப்பாக, புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு மட்டும், 14,682 கோடி ரூபாய் தேவை. ஆனால் இதுவரை, 1,295 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டில், 876 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு முந்தை ஆண்டை ஒப்பிடுகையில் இந்த நிதி அதிகமாக இருந்தாலும், இந்த நிதி புதிய திட்டப் பணிகளுக்கு போதாது.உத்தர பிரதேசத்தில் 19,848 கோடி ரூபாய், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களுக்கு 15,000 கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு ஒதுக்கியுள்ள நிதி போதாது. இனி வரும் பட்ஜெட்டிலாவது, ரயில் திட்டங்களுக்கு கூடுதல் நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும். அப்போது, தான் தமிழகத்தில் பல ஆண்டுகளாக நடந்து வரும் ரயில் திட்டங்களை முடிக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

M Ramachandran
ஆக 10, 2024 20:18

தமிழகத்தை அவர்கள் மறக்க வில்லை. மகிழ்ச்சி. மயிலாடுதுறை தரங்கம் பாடி ரயில் குறைந்த தூரமுள்ளது. முன்பு அலகு ஓடிய ரயில் பாதைய்ய நிலையம் இன்னும் ரயில்வே துறையிடம் உள்ளது அதற்க்கு தேவாயா அதிகப்படியான இலத்தியய தமிழக அரசு கையாக படுத்தி அதை திட்டத்தில் சேர்த்து கொள்ளலாம். ஒரு பிரச்சனிய்ய என்ன வென்றால் திட்டத்திற்கு தாமதமின்றி நிலம் கையாக படுத்தி கொடுத்தால் வீரைய்யவாக முடியும். ராமேஸ்வரம் தனுசுகோடி மோடி யின் கனவு திட்டம் தற்கு நிலம் தர தமிழகம் முட்டு கட்டைய்ய போடுகிறது. இது பிற் காலத்தில் அங்கு ராணுவ தளம் அமைக்க உதவும். சீனாக்காரனின் குசும்பாய் அவன் தலையிலேயே தட்டலாம்.


சித்தறஞ்சன்
ஜூலை 29, 2024 18:57

ஒன்றுக்கு உதவாத 40 திமுக கூட்டணி கும்பலாக வைத்துக்கொண்டு என்ன செய்வது. குறைந்தது 10 பாஜக எம்பிக்களை அனுப்பி இருந்தாலாவது கட்டாயம் ஏதேனும் செய்து இருப்பார்கள்.


aaruthirumalai
ஜூலை 26, 2024 13:27

ஐயா நீண்ட நாள் கோரிக்கையான பட்டுக்கோட்டை தஞ்சாவூர் இல்லையே?


Neutrallite
ஜூலை 26, 2024 12:22

அதிகாரிகள் கருத்தை போட்டாலோ ஒரு வல்லுனரின் கருத்தை போட்டாலோ சரி.... தொழில் சங்க தலைவர் கருத்தை எல்லாம் ஏன் போடுகிறீர்கள்? அவர்கள் கட்சி சார்புடையவர்கள், இடது சாரிகள். அவர்களிடமிருந்து உண்மையான கருத்து எப்படி வெளிப்படும்? இவருக்கு எந்த திட்டத்துக்கு எதனை ஆயிரம் கோடி வேண்டும் என்று எப்படி தெரியும்?


Nandakumar Naidu.
ஜூலை 26, 2024 02:35

அதிக நிதி வேண்டும் என்றால் அதிக எம் பி க்களை பிஜேபிக்கு கொடுக்கவேண்டும் தமிழகம். தமிழக மக்கள் திருந்துவார்களா? மேலும், தமிழகத்திற்கு 2014 முதல் 2024 வரை 1 லட்சம் கோடிகளுக்கு மேல் மத்திய அரசு கொடுத்துள்ளது. இந்த இத்துப்போன திராவிட அரசு நிதியே கொடுக்கவில்லை என்று பொய் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ