உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தி.மு.க., ஆதரவு விவகாரத்தில் பீட்டர் - வேலுச்சாமி மோதல்

தி.மு.க., ஆதரவு விவகாரத்தில் பீட்டர் - வேலுச்சாமி மோதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தமிழக காங்கிரஸ் கட்சியில், முன்னாள் எம்.பி., பீட்டர் அல்போன்சுக்கும், மாநில நிர்வாகி திருச்சி வேலுச்சாமிக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.சமீபத்தில், தனியார் 'யு டியூப் சேனல்' ஒன்றுக்கு பீட்டர் அல்போன்ஸ் அளித்த பேட்டி:கூட்டணி இல்லாமல், தமிழக அளவிலும் சரி, தேசிய அளவிலும் சரி, வரும் 50 ஆண்டுகளுக்கு யாரும் ஆட்சி அமைக்க முடியாது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பலமான கூட்டணி, தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. இதில் கை வைப்பது, தேன் கூட்டை கலைப்பது போன்றது. அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டுமானால், முதலில் நம்மை அதற்கு தகுதி உடையவர்களாக ஆக்கிக் கொள்ள வேண்டும். கூட்டணி வேண்டாம் என்பவர்கள், வெறும் கையை வீசி நடப்பவர்கள்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.அவருக்கு பதிலடி தரும் விதமாக, திருச்சி வேலுச்சாமி அளித்த பேட்டி:பீட்டர் அல்போன்ஸ் அப்படி பேசுவது பைத்தியக்காரத்தனம். செல்வப்பெருந்தகை தலைவரானதும், ஆறு மாதங்களில், 73 மாவட்டங்களில், 70 ஆய்வுக் கூட்டம் நடத்தி விட்டார். நானே நான்கு பயிற்சி பட்டறை நடத்தி இருக்கிறேன். இதெல்லாம் காங்கிரசை வைத்து வியாபாரம் செய்கிற பீட்டர் அல்போன்சுக்கு தெரியாது.காங்கிரஸ் தான் ஆட்சியில் இல்லையே; பின் ஏன் மானங்கெட்டுப் போய், தி.மு.க., ஆட்சியில் பீட்டர் அல்போன்ஸ் பதவி வாங்க வேண்டும். கூட்டணியில் பதவி வாங்கியதாக கூறினால், அவரை மாதிரி, நான்கு பேருக்கு அமைச்சர் பதவி, தி.மு.க., அரசில் கொடுக்க வேண்டும். நான் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கிறேன் என்றால், அவர் காங்கிரசை விட்டு ஓடி போகட்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.பீட்டர் அல்போன்ஸ் ஆதரவாளர்கள் மயிலை அசோக், அடையாறு ரவி உள்ளிட்ட சிலர், திருச்சி வேலுச்சாமியை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என போர்க்கொடி துாக்கி உள்ளனர். இது தொடர்பாக, அவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள விபரம்:விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் என முத்திரை குத்தப்பட்டு, காங்கிரஸ் தலைவர்களாலும், தொண்டர்களாலும் நிராகரிக்கப்பட்ட திருச்சி வேலுச்சாமி, பீட்டரை அவன், இவன் என்றும், பைத்தியக்காரன், மானங்கெட்டவன் என்றும் பேசியது கண்டிக்கத்தக்கது.சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் இல்லாத நேரத்தில், பேட்டி அளித்த திருச்சி வேலுச்சாமியின் குரல், செல்வப்பெருந்தகை குரலாகவே பார்க்கப்படும். இதை ஆரம்பித்திலேயே கிள்ளி எறிய வேண்டும். இல்லையென்றால், கட்சியில் கட்டுப்பாடற்ற நிலைமை உருவாகும். எனவே, திருச்சி வேலுச்சாமி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் பதிவிட்டுள்ளனர்- நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

N Sasikumar Yadhav
ஆக 17, 2024 15:58

திருச்சி வேலுச்சாமி சொன்னது 100 சதவீதம் உண்மை பதவிக்காக ஊழல்மிகு இத்தாலிய கான்கிராஸை கோபாலபுர கொத்தடிமை பீட்டர் திமுகவிடம் அடகு வைத்துவிட்டார்


ஆரூர் ரங்
ஆக 17, 2024 10:30

21 ம் பக்கங்கள் காங்கிரஸிலும் உண்டு. வேலுச்சாமி இது புரியாத அப்பாவி.


தமிழ்வேள்
ஆக 17, 2024 09:58

திமுகவுக்கு ஆதரவாக மண்சோறு தின்னலாம்..... ஒரு வித்தியாசம் ஆக, மண் பிரியாணி தின்னுங்கப்பா


KALIDAS C
ஆக 17, 2024 09:35

பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் திராவிடம் காத்தானாக மாறி தசாப்தங்கள் மூன்று நிறைவு பெற்று விட்டன. இனியும் அவரை தேசியவாதி என்று நினைத்து நேரத்தை வீணாக்குவது பயனற்றது.


ஆரூர் ரங்
ஆக 17, 2024 09:24

பீட்டர் எப்போதோ 200 உ.பி ஆகிவிட்டார். அவரை நம்பியே இருக்கிறதாம். இப்படி திடீர்னு முழுச்சிக்கிட்டு தாக்கினா எப்படி?


PARTHASARATHI J S
ஆக 17, 2024 08:06

நல்லா உருண்டு புரண்டு சண்டை போடுங்க. மக்கள் பிரச்னையை கண்டுக்காதே காங்கிரஸ். எப்படியும் பாஜக ஆட்சிதான் தமிழகத்தில் 2026ல்.


மோகனசுந்தரம்
ஆக 17, 2024 06:38

ஒருத்தனுக்கும் வெட்கம், மானம் சூடு சொரணை என்பது கொஞ்சம் கூட கிடையாது. பீட்டர் அல்போன்சை போன்ற ஒரு மானங்கெட்டவனை பார்க்க முடியாது. நமது அருமை ராகுல் காந்தியை விட மு க ஸ்டாலின் பிரதம பதவிக்கு மிகப் பொருத்தமானவர் என்று முதுகை சொறிந்தான்.


A good
ஆக 17, 2024 07:59

சரியான போட்டி.இது தான் காங்கிரஸ்ஸின் முகம். பதவி சுகத்திற்க்குமட்டுமே இந்த கட்சி. மற்றபடி மக்களுக்கு சேவை செய்ய அல்ல.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை