உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டில்லி உஷ்ஷ்ஷ்... பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்.,சில் என்ன பிரச்னை?

டில்லி உஷ்ஷ்ஷ்... பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்.,சில் என்ன பிரச்னை?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பா.ஜ.,வுக்கு கொள்கை ரீதியாக வழிகாட்டுவது, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு. இந்த அமைப்பிலிருந்து பல சீனியர் தலைவர்கள், பா.ஜ.,வில் பணியாற்றுகின்றனர். தேர்தல் சமயத்தில், மக்கள் மத்தியில் களத்தில் இறங்கி, ஆர்.எஸ்.எஸ்., பணியாற்றியுள்ளது. பிரதமர் மோடியும், 1980களில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் இருந்தவர் தான். இப்படி பல தலைவர்கள் பிரதமர் மட்டுமன்றி, முதல்வர்களாகவும் ஆகியுள்ளனர்.அப்படியிருக்க என்ன பிரச்னை பா.ஜ.,விற்கும் ஆர்.எஸ்.எஸ்.,சுக்கும்?சமீபத்தில் இதன் தலைவர் மோகன் பாகவத் பேசும் போது, 'உண்மையான சேவகர்களூக்கு அகங்காரம் இருக்கக் கூடாது. அத்துடன், மற்றவர்களுக்கு எந்த தீங்கும் செய்யாமல் இருக்க வேண்டும்' என கூறினார்.லோக்சபா தேர்தலில் பெரும்பான்மை பெற தவறிய பா.ஜ.,விற்கும், பிரதமர் மோடிக்கும் பாகவத் தரும் அறிவுரை இது என கூறப்படுகிறது.துவக்கத்தில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் முக்கிய பதவியில் இருந்த மோடி, கடந்த ஏழு ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ்., தலைவர்களுடன் கலந்து ஆலோசனை நடத்த வில்லை. மோடி மிகப் பெரிய தலைவராகி விட்டதால் அவருக்கு ஆலோசனை சொல்லவோ அல்லது அவரிடம் நெருங்கவோ ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் தயங்கினர். இந்நிலையில் தான், இப்படி பொதுவெளியில் மோடிக்கு 'அட்வைஸ்' அளித்துள்ளாராம் பாகவத்.ஆர்.எஸ்.எஸ்., இயக்கம் துவங்கி அடுத்த ஆண்டுடன் 100 ஆண்டுகள் ஆகின்றன. மக்களுக்கு சேவை செய்வது தான், இந்த இயக்கத்தின் குறிக்கோள்; அதை பலவித அமைப்புகள் வாயிலாக செய்து வருகிறது.உத்தர பிரதேசத்தில் பா.ஜ., எப்படி தோற்றது என்பது குறித்து, நிச்சயம் மோடி ஆலோசனை நடத்தி, அதில் உள்ள தவறுகளை சரி செய்வார். அரசியலில் தலையிடுவது இந்த அமைப்பின் நோக்கம் இல்லை. பா.ஜ.,வில் பல சீனியர் தலைவர்கள் உள்ளனர்; அவர்கள் கட்சியைப் பார்த்துக் கொள்வர். பாகவத் பேசியது, பா.ஜ.,விற்கு ஒரு விதமான எச்சரிக்கை என சொல்லப்படுகிறது.'இரண்டு பேருக்கும் கருத்து வேறுபாடு என, இதில் எதிர்க்கட்சியினர் குளிர் காய நினைத்தால் அது நடக்காது' என்கின்றனர் ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ., தலைவர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Sampath Kumar
ஜூன் 22, 2024 11:00

இவர் இஷ்டத்துக்கு ஆட்டம் போடுகின்றரு ஜி 7 மனதில் இவரு ஏன் கலந்து கோணாற்று இத்தனைக்கும் ஜி 7 இல் இந்திய அங்கம் வைக்க இல்லை முந்திரி கோட்டை போல நின்று போட்டோ விற்கு போஸ் கொடுத்து .


SenthilKumar S
ஜூன் 17, 2024 22:27

இப்படி ஒரு மாயை உருவாகிவிட்டது. இந்து மதத்தை உயர்த்தி பேசி கோயிலுக்குச் சென்றாள் பாஜக என்ற முத்திரை அவர்களாக குத்துகிறார்கள். பாஜக அல்லாதவர்கள் கோயிலுக்கு செல்லாதவர்கள் என்று தவறாக முத்திரை குத்துகிறார்கள். மீண்டும் மீண்டும் இந்தத்துவா பேசுவதை பாஜக குறைத்துக் கொண்டால் வெற்றி கிட்டும்.


Mahalingam
ஜூன் 17, 2024 17:24

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அடிப்படை இயக்க ரீதியான கொள்கை அதனால் வழி நடத்தப்படும் இயக்கங்களின் வளர்ச்சியோடு இணைந்து வளர்ந்து வருகின்ற மட்டும் வளர்ச்சிக்கு காரணமான கார்யகர்தாவினை வீண் பழி சுமத்தி இயக்கத்திலிருந்து விலக்க ஆவன செய்வதற்கும். வ்யக்தி நிஷ்டா ... த்யேய நிஷ்டா என்ற மந்திர வார்த்தைகளால் உச்சத்திலி ருக்கும் தலைமனிதனை ஒதுக்க நினைப்பதுதான். இதுபோன்ற பலர் இருக்க இப்போது நரேந்திர மோடி இதற்கு ஆளாகப்போகிறார். ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.


Kannan Soundarapandian
ஜூன் 16, 2024 16:06

பாஜகவின் ஹிந்துத்துவா கொள்கையே அவர்களின் பின்னடைவு. மேலும் யாராவது கோயில்களுக்கு சென்றால் அவர்கள் பாஜக என்று கூறுகிறது. இது பெரிய பின்னடைவு.


pmsamy
ஜூன் 16, 2024 09:35

சபாஷ் நல்ல போட்டி


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை