உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / குறைந்தது பயண நேரம்; குவியுது பயணியர் கூட்டம்! வந்தே பாரத் நேர மாற்றத்துக்கு வரவேற்பு

குறைந்தது பயண நேரம்; குவியுது பயணியர் கூட்டம்! வந்தே பாரத் நேர மாற்றத்துக்கு வரவேற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பயண நேரத்தை மாற்றியமைத்த பின், கோவை-பெங்களூரு வந்தே பாரத் ரயிலுக்கான 'புக்கிங்' அதிகரித்து வருகிறது. வரும் நாட்களில் இது மேலும் அதிகரிக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.கோவை-பெங்களூரு வந்தே பாரத் ரயில் சேவை, கடந்த ஜன.,1 ல் துவக்கப்பட்டது. காலையில் 5:00 மணிக்கு, கோவையிலிருந்தும், அங்கிருந்து மதியம் 1:40 மணிக்கும் புறப்படும் வகையில் பயண அட்டவணை இருந்தது. பயண நேரம், 6:30 மணி நேரமாக நிர்ணயிக்கப்பட்டது. கோவையிலிருந்து காலை 6:10 மணிக்கும், பெங்களூருவிலிருந்து மதியம் 2:30 மணிக்கும் புறப்படும் வகையில், இந்த ரயிலின் நேர அட்டவணையை மாற்ற வேண்டும்; பயண நேரத்தை 5:40 மணி நேரமாகக் குறைக்க வேண்டுமென்று பல தரப்பினருரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்நிலையில், கடந்த மார்ச் 11 லிருந்து, இந்த ரயிலின் பயண அட்டவணை மாற்றியமைக்கப்பட்டது. புதிய அட்டவணையின்படி, கோவையில் காலை 7:25 மணிக்கு புறப்படுகிறது. பெங்களூரில் இருந்து மதியம் 2:20 மணிக்குக் கிளம்புகிறது.உதாரணமாக, கடந்த மார்ச் 12 அன்று, கோவையிலிருந்து காலை 7:25 மணிக்குப் புறப்பட்ட வந்தே பாரத் ரயில், அங்கு அட்டவணைப்படி மதியம் 1:50 மணிக்குச் சென்றடைய வேண்டும். ஆனால், மதியம் 1:02 மணிக்கே, அதாவது 48 நிமிடங்கள் முன்பாகவே சென்று விட்டது. இதனால், பயண நேரம் 6 மணி 10 நிமிடங்களுக்குப் பதிலாக, 5 மணி நேரம் 12 நிமிடங்களாகக் குறைந்துள்ளது. பயண நேரம் குறைந்ததால், வந்தே பாரத் ரயிலுக்கான 'புக்கிங்' அதிகரிக்கத் துவங்கியுள்ளது.இந்த ரயிலில் உள்ள 530 ஏ.சி., சேர் கார் இருக்கைகளில், எக்ஸிகியூட்டிவ் இருக்கைகள் தவிர மற்றவை அனைத்தும் 'புக்கிங்' ஆகியுள்ளன. அடுத்த 15 நாட்களில், இதற்கான வரவேற்பு மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. -நமது நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

jayvee
மார் 19, 2024 20:10

வந்தேபாரத் ரயில்களை இரவில் இயக்கினால் ஆம்னி பஸ் முதலைகளின் கொள்ளையும் குறையும் ..


Ramesh Sargam
மார் 18, 2024 22:19

நன்றி.


Mohan das GANDHI
மார் 18, 2024 16:28

வந்தே பரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் படுத்து உறங்கும் வசதியுடன் என்று தான் சென்னை TO புது டில்லி செல்ல திட்டமிடப்பட்டுள்ளது இந்தியன் ரைல்வேஸ்? MP'S and Ministers Centralgovernment should strickly GO order that government officcials all should travel paid their own tickets by Trains only not by Aeroplanes


Kundalakesi
மார் 18, 2024 15:56

Super but this train is not for economy riders


surendran111@yahoo.com
மார் 18, 2024 12:32

வடமாநிலங்களில் தொடர்ந்து ஏழு-பதினோரு மணிநேரத்திற்குமேல் இயக்கம் பொது இந்த ரயில் மட்டும் ஏன் தொடர்ந்து மதுரை முதல் பெங்களூர் வரை ஏன் நீடித்து இயக்கக்கூடாது. பல அளுத்தங்களுடன் ரயில் சுமந்து செல்கிறதோ .. இவ்வளவு செலவு செய்து ரயில் இயக்கம் பொது ஏன் அதிகபட்ச பயன் எட்ட முடியவில்லை. ரயில்வே விழிக்குமா ....


Apposthalan samlin
மார் 18, 2024 12:09

வந்தே பரத்துக்கு ஆக மற்ற ரயில் எல்லாத்தையும் வழி நெடுக நிப்பாட்டி வைத்து விடுகிறார்கள்.


Gopalan
மார் 18, 2024 10:55

I think Salem Dharmapuri section and beyond is not yet certified for 100 plus kms operation. not sure if it has been upgraded in recent days.safety first , speed comes next. if 500kms between CBE n MDS can be covered in less than 6 hours ,why not the 380 kms between CBE n BLR be covered in 5 hours.


duruvasar
மார் 18, 2024 10:29

மாற்றியமைத்த நிர்வாகத்திற்க்கு நன்றிகள் பல.


g.s,rajan
மார் 18, 2024 09:13

Train Fare is Indirectly raised in India by the Railways by introducing more Vandhe Bharath Trains....


K.Muthuraj
மார் 18, 2024 10:23

அதனால என்னையா? இலவசமா எதுவும் நடக்குதுய்யா. அரசாங்கம்தானய்யா அது. வேற தனியார் நிறுவனமா?


hari
மார் 18, 2024 18:08

rajan needs all in osi


g.s,rajan
மார் 18, 2024 09:09

In India only Vandhe Bharath Trains will be Operated here after,all the other Super fast trains will be Vanished.


hari
மார் 18, 2024 18:07

you can go by share auto... why worrying too much?


மேலும் செய்திகள்











புதிய வீடியோ