உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மீனாட்சி அம்மனின் செங்கோலை லோக்சபாவில் அவமதிப்பதா?: மதுரை எம்.பி.,க்கு பொதுமக்கள், பா.ஜ., கண்டனம்

மீனாட்சி அம்மனின் செங்கோலை லோக்சபாவில் அவமதிப்பதா?: மதுரை எம்.பி.,க்கு பொதுமக்கள், பா.ஜ., கண்டனம்

மதுரை : லோக்சபாவில் நேற்று முன்தினம் முதன்முதலாக பேசிய மதுரை மார்க்சிஸ்ட் எம்.பி., வெங்கடேசன், 'செங்கோலை வைத்திருந்த ஒவ்வொரு மன்னனும் தனது அந்தப்புரத்தில் எத்தனை நுாறு பெண்களை அடிமையாக வைத்திருந்தான் தெரியுமா. அந்தச் செங்கோலை இந்த அவையில் வைத்திருப்பதன் மூலம், இந்த நாட்டு பெண்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்' என்று ஆவேசமாக பேசினார்.அவரது இந்தப் பேச்சு தமிழக மக்களிடம் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மன்னர்கள் ஆண்ட பாரம்பரிய பெருமை மிக்க மதுரை மண்ணின் எம்.பி., அந்த மன்னர்களையே அவமதிப்பதா என மதுரை மக்களும் கொதித்து போயுள்ளனர்.பா.ஜ., விவசாய பிரிவின் மாநில துணைத் தலைவர் சசிராமன் கூறியதாவது: தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் பெருமையை, ஆட்சியின் மாண்பை, பாதுகாக்கும், பறைசாற்றும் விதமாக மன்னர்கள் கையில் வைத்திருந்த செங்கோலை பார்லிமென்டில் அவமதித்து பேசிய மதுரை மார்க்சிஸ்ட் எம்.பி., வெங்கடேசன் வரலாற்றை திரும்பி பார்க்க வேண்டும்.சிலப்பதிகாரத்தில் கோவலனுக்கு தவறாக தீர்ப்பளித்த பாண்டிய மன்னன் தன் உயிரைக் கொடுத்து தன் செங்கோலை நிமிர்த்தினான். தமிழக மாநகராட்சிகளில் ஆட்சிப் பொறுப்பேற்கும் மேயர்களுக்கு பொறுப்பேற்றதற்கு சாட்சியாக செங்கோலை அளிக்கின்றனர். இம்மரபுகளை கட்டிக்காக்கும் தமிழகத்தில், இப்படி பொறுப்பற்ற வகையில் பேசிய எம்.பி., தமிழகத்திற்கே அவமானம்.மதுரையை ஆளும் மீனாட்சி செங்கோல் தரிக்கும் நாளில் லட்சோப லட்சம் மக்கள் திரண்டு வந்து தரிசனம் செய்து, தங்கள் வீட்டிலும் இதுபோல நடக்க வேண்டும் என வேண்டுவர். ஆன்மிக பூமியான மதுரை மண்ணின் எம்.பி., மதுரை மீனாட்சியின் செங்கோலையே அவமதித்தது போல பேசியிருக்கிறார். இதன் மூலம் ஓட்டளித்த மதுரை மக்களை அவமதித்துள்ளார்.மன்னர்கள், தமிழர்கள், பக்தர்கள் மனம் புண்படும்படி பேசிய மதுரை எம்.பி., வெங்கடேசனுக்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

கொந்தளித்த 'நெட்டிசன்கள்'

மதுரை எம்.பி., வெங்கடேசன் தனது செங்கோல் பேச்சு குறித்து அவரது 'எக்ஸ்' தளத்தில் விரிவாக பதிவிட்டுள்ளார். அவரது பதிவுக்கு அவரை பாலோ செய்யும் 'நெட்டிசன்கள்' எதிராக கொந்தளித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். அவற்றில் சில* ஆசிய கண்டத்தை கட்டி ஆண்ட ராஜராஜசோழனை ஏதோ ஒரு பொம்பள பொறுக்கி போல சித்தரித்ததில் என்ன பெருமை. அந்தப்புர பெண்களை பற்றி பேசத் தான் மக்கள் உங்களை தேர்ந்தெடுத்தார்களா.* அந்தப்புரத்தில் பெண்களுடன் நடனம் ஆடிய மாவோவை ஏன் கொண்டாடுகிறீர்கள். மாவோவை பற்றி அவர் மருத்துவர் எழுதியதை பாரும்.* பாண்டிய மன்னர்களை கேவலப்படுத்திய வெங்கடேசன் தொடர்ந்து ஹிந்து மத வெறுப்பை பரப்புகிறார். இவரை எம்.பி.,யாக தேர்ந்தெடுத்ததற்கு மதுரை மக்களுக்கு 'பாராட்டுகள்'. ஆன்மிக பூமியில் ஒரு சாக்கடை.* தமிழர் மரபை கேவலப்படுத்தும் உங்களை எம்.பி., ஆக்கியதற்கு மக்கள் வருத்தப்பட வேண்டும்.* சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மண்ணிலிருந்து போய் டில்லியில் செங்கோல் பற்றி தவறான கருத்தை பதிவு செய்தது மிகவும் மோசமான செயல். தமிழ்நாட்டில் உங்கள் மாவட்டத்தில் எத்தனையோ பேச வேண்டியவை இருக்க இப்படி வன்மத்தை கக்குவதா* உங்கள் பேச்சுக்கு தமிழனாய் வெட்கப்படுகிறேன்.* இவரது பெயரை மாற்ற வேண்டும். நமது கடவுள் பெயரை வைக்கும் உரிமையை இழந்துவிட்டார்.* மதுரையில் உங்களுக்கு 'நல்ல வரவேற்பு' கொடுக்க ஹிந்து மக்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். இவ்வாறு கொந்தளித்துள்ளனர்.இதனை தொடர்ந்து லோக்சபாவில் பேசிய வீடியோவை தனது 'எக்ஸ்' தளத்தில் இருந்து நீக்கிவிட்டார் எம்.பி., வெங்கடேசன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Swaminathan L
ஜூலை 04, 2024 18:28

என்ன செய்ய? மோதிஜி எதிர்ப்பு என்று ஒரே ஒரு நோக்கத்தோடு கட்சி இருந்தால் அதன் உறுப்பினர் இப்படித்தான் பேசி சிக்க வேண்டி வரும். பசுவுக்கு நீதி வழங்கிய மனு நீதிச் சோழன், தமிழுக்கும், ஸனாதன தர்மத்திற்கும் அளப்பரிய தொண்டுகள் ஆற்றிய சேர், சோழ, பாண்டிய மன்னர்கள் அனைவருமே செங்கோல் ஏந்தியே, அதன் கீழ் தங்கள் ஆட்சியைப் புரிந்தனர். அவர்கள் அனைவரும் நூறு, ஆயிரம் பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தார்களா என்ன? ட்ரெஷரி பெஞ்சில் இருக்கும் ஆசை தகர்ந்து போனதால் சிந்தனையும், பேச்சும் ட்ராஷ் ஆகிப் போனதோ?


B.Eswaran
ஜூலை 04, 2024 06:17

பாராளுமன்றத்திற்கு அனுப்பிய மதுரை மக்களை இவன் கேவலப்படுத்தியுள்ளான்


vijai
ஜூலை 03, 2024 20:32

பொறம்போக்கு


பேசும் தமிழன்
ஜூலை 03, 2024 20:09

யாருக்கு ஓட்டு போட போகிறோம் என்று தெரியாமல் ஓட்டு போட்டால்.... இப்படி தான் அனுபவிக்க வேண்டும்.... எதையோ குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும்..... அது சாக்கடையில் தான் விழுந்து புரளும்.


ஜனக் குமார்
ஜூலை 03, 2024 11:49

செங்கோல்னா கைக்கு அடக்கமா சின்னதா இருக்கணும். இவிங்க பெரிய மாத்தொலக்கை சைசுக்கு ஒண்ணைக் குடுத்து செங்கோல்னுட்டு... அவிங்க என்ன? எனக்கே கேலியாத் தெரியுது.


திருட்டு திராவிடன்
ஜூலை 03, 2024 10:58

கவுண்டமணி கூறுவது போல் இந்த ...க்கு 500 ரூபாய் தூக்கிப் போட்டால் ஐந்து வருடத்திற்கு ஒருமுறை ஓட்டு போடும். இப்பொழுதுதான் அந்த ...கள் 500 ரூபாய் பெற்றுக் கொண்டார்கள். எனவே இன்னும் ஐந்து வருடத்திற்கு ஒன்றும் நடக்கப் போவதில்லை.


Venkatesh Sagadevan
ஜூலை 03, 2024 10:34

மானங்கெட்ட மக்களே.. அவன் புத்தி என்னனு தெரிஞ்சும் நீங்க தானே MP ஆ தேர்ந்தெடுத்தீங்க... இப்போ பொங்கி என்ன பிரயோஜனம்....


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
ஜூலை 03, 2024 10:21

இந்த வெங்கடேசன் தேவையில்லாத வேலைகளை செய்து வருகிறார். தமிழர்களின் பெருமையை குலைப்பதாக உள்ளது இவரின் பேச்சு. இவர் கட்சி கூட்டணி வைத்து உள்ள திருட்டு திராவிடம் என்று இவருக்கு தெரியாதா? அப்புறம் அவர்கள் தயவில் பெற்ற அவரது மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டியதுதானே


NELLAI ARUNACHALAM A
ஜூலை 03, 2024 10:02

இவனை தேர்வு செய்த மதுரை மக்கள் உணர வேண்டும்


கௌதம்
ஜூலை 03, 2024 07:12

எது மதுரை மக்கள் கொந்தளித்தார்களா? மூடர்கள்... எதுவும் செய்யாத எம்.பி என்று தெரிந்தும் 300ஓவாயை வாங்கிக்கொண்டு ஓட்டு போட்டு வெற்றியை கொடுத்துவிட்டு இப்ப கொந்தளிக்கிறார்களாம்?


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை