உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / இ.பி.எஸ்.,க்கு எதிராக அடுத்த கட்டம்: ஓ.பி.எஸ்., சசிகலா தனித்தனி திட்டம்

இ.பி.எஸ்.,க்கு எதிராக அடுத்த கட்டம்: ஓ.பி.எஸ்., சசிகலா தனித்தனி திட்டம்

சென்னை : லோக்சபா தேர்தல் தோல்வியை தொடர்ந்து, அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும்படி, இ.பி.எஸ்.,க்கு மறைமுக நெருக்கடி கொடுக்க சசிகலா மற்றும் ஓ.பி.எஸ்., திட்டமிட்டுள்ளனர். இதற்காக கட்சியினரை சந்திக்க, சசிகலா சுற்றுப்பயணம் செல்ல உள்ளார். ஓ.பி.எஸ்., தன் ஆதரவு மாவட்டச் செயலர்கள் கூட்டம், நாளை மறுதினம் நடக்கும் என அறிவித்துள்ளார்.லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது. சில தொகுதிகளில் டிபாசிட்டை பறிகொடுத்ததுடன், மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இ.பி.எஸ்., தலைமை ஏற்ற பின், கட்சி தொடர்ச்சியாக 10 தேர்தல்களாக தோல்விகளை சந்தித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து, கட்சியை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற கோஷமும், இ.பி.எஸ்., எதிர் வட்டாரத்தில் கிளம்பியுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=pbhy7gzk&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஓ.பி.எஸ்., ஆதரவாளர்களாக இருந்த பிரபாகர், பெங்களூரு புகழேந்தி ஆகியோர், முன்னாள் எம்.பி., கே.சி.பழனிசாமியுடன் இணைந்து, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பு குழுவை துவக்கியுள்ளனர். இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., சசிகலா, தினகரன் ஆகியோரை சந்திக்க நேரம் கேட்டு, கடிதம் அனுப்பி உள்ளனர்.தொடர் தோல்வியை சந்தித்து வரும் சூழ்நிலையில், மீண்டும் தோல்வியை சந்திக்க விரும்பாத இ.பி.எஸ்., விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தார். இ.பி.எஸ்., பலவீனமடைந்துள்ள நிலையில், கட்சியில் மீண்டும் இணைந்துவிட சசிகலா, ஓ.பி.எஸ்., காய் நகர்த்துகின்றனர்.இ.பி.எஸ்.,க்கு நெருக்கமாக உள்ள அ.தி.மு.க., நிர்வாகிகளுடன் தொடர்ந்து இணைப்பு தொடர்பாக பேசி வருகின்றனர். அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கையாக உள்ளது. ஆனால், சசிகலா, ஓ.பி.எஸ்., ஆகியோரை கட்சியில் இணைப்பதை இ.பி.எஸ்., விரும்பவில்லை. இந்த சூழ்நிலையில், வெறுமனே கட்சியை ஒன்றிணைப்பதாக அறிக்கை விட்டால் போதாது; செயலில் இறங்க வேண்டும் என சசிகலா முடிவெடுத்துள்ளார்.நிர்வாகிகளை சந்தித்து பேச, தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் செய்வது, கட்சியில் உள்ள தன் ஆதரவாளர்களை, இ.பி.எஸ்.,க்கு எதிராக திரட்டுவது என அவர் முடிவு செய்துள்ளார். அதேபோல், ஓ.பி.எஸ்., தன் ஆதரவாளர்களிடம் ஆலோசித்து, அடுத்தகட்ட செயல்பாடுகளை திட்டமிட உள்ளார்; அதற்காக, அ.தி.மு.க., தொண்டர்கள் மீட்பு குழு சார்பில் செயல்படும் மாவட்டச் செயலர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார். நாளை மறுதினம் மாலையில் சென்னையில் இக்கூட்டம் நடக்கிறது.இது குறித்து, ஓ.பி.எஸ்., மற்றும் சசிகலா ஆதரவாளர்கள் கூறியதாவது: கட்சி ஒன்றிணைய வேண்டும் என்ற எண்ணம், இரண்டாம் மட்ட தலைவர்களிடம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, சில முன்னாள் அமைச்சர்களுடன் பேச்சு நடந்து வருகிறது. இ.பி.எஸ்.,ம், ஓரிரு முன்னாள் அமைச்சர்களும் மட்டும் தடையாக உள்ளனர்.விரைவில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் துவங்கும். கட்சியை ஒன்றிணைக்க வேண்டும் என்ற குரல், இ.பி.எஸ்., வட்டத்திலேயே எழும். சட்டசபை தேர்தலுக்கு முன், கட்சியை ஒன்றிணைக்க வேண்டும் என்பதே எங்களின் ஒரே இலக்கு. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Ramesh Sargam
ஜூன் 18, 2024 13:09

அதிமுகவில் இருந்த அந்த இரட்டை இலையை, அந்த இருவர் உடைத்து எறிந்துவிட்டனர். மிச்சமுள்ள செடியையும் உடைக்க மூன்றாவதாக இந்த சின்னம்மா என்றழைக்கப்படும் சசிகலா. வாழ்த்துக்கள்.


Kogulan
ஜூன் 18, 2024 12:40

கை புண்ணுக்கு கண்ணாடி எதுக்கு? கெட்ட விஷயமோ நல்ல விஷயமோ சசி மிக திறமையானவர்தான் ஆனால் தன் கையிலிருந்த முழு பிடியையும் முற்றிலும் தவறவிட்டுவிட்டார் தொண்டர்கள் வெகுதூரம் விலகிச்சென்றுவிட்டனர் சிறையிலிருந்து வெளிவந்தவுடன் சீரி பாய்வார் என்று எதிர்பார்த்தவர்கள் ஏமாந்தனர் இனி என்ன செய்ய...


கோவிந்தராஜ்
ஜூன் 18, 2024 07:14

அம்மா அய்யா இருவராலும் ஏதும் செய்ய இயலாது. EPS தலமையில் வலுவாக உள்ளது. இவர்கள் சில ஊடக வியழாலர் என்னம் எடுபடாது. சசிகலா வந்தா ஜெயிக்க வச்சுருவாளாம, வெட்டி வேலை


KR
ஜூன் 18, 2024 06:17

If these people agree to work under EPS, then only he will agree to take them into the party. Otherwise, the only way out will be to force another split in the party and each group will have to prove their strength in the next assembly elections and prove who is real ADMK. In 1989, we had JJ and JA factions contest separately and when JJ faction won 29 seats, Janaki decided to give up and ADMK united under JJ in 1991. Anyway DMK will have NDA as the main challenger in 3026, if ADMK contests as 2 factions in 2026. When will OPS and EPS realise that they are not MGR or JJ


மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை