உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ரேஷன் அரிசிக்கு தட்டுப்பாடு வருமா?

ரேஷன் அரிசிக்கு தட்டுப்பாடு வருமா?

சென்னை: மத்திய அரசு சார்பில், தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம், விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்கிறது. இந்த நெல், அரிசியாக மாற்றப்பட்டு, ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.கடந்த, 2023 செப்., 1ல் துவங்கிய நடப்பு நெல் கொள்முதல் சீசனில், நேற்று முன்தினம் வரை, 11.43 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது, முந்தைய சீசனில் இதே காலகட்டத்தில், 15.50 லட்சம் டன்னாக இருந்தது. 5 லட்சம் டன் நெல் குறைந்துள்ளதால், ரேஷன் கடைகளில் அரிசிக்கு தட்டுப்பாடு வருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.இதுகுறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'போதிய தண்ணீர் இல்லாததால், டெல்டா மாவட்டங்களில் நெல் விளைச்சல் பாதிக்கப்பட்டது. கிடங்குகளில் மூன்று மாதங்களுக்கு தேவையான அரிசி இருப்பு உள்ளது. இந்திய உணவு கழகத்திடம் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் அரிசி வருவதால், தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

raja
பிப் 17, 2024 14:13

தமிழனுக்கு ஒட்டுக்கு ருவா ரெண்டாயிரம் ஓசி குவர்டரு, பிரியாணி கிடைக்காது என்றால் தான் திருட்டு ஒன்கொள் திராவிடநுக்கு ஒட்டு போட மாட்டான்...அரிசி கிடைக்காது என்று எவ்வளவு கூவினாலும் ரெண்டாயிரம் கொடுப்பவனுக்கு கண்டிப்பாக ஒட்டு போடுவான்...ஆகாங்...


rama adhavan
பிப் 17, 2024 13:03

பரவாயில்லை. ரேஷன் அரிசி கடத்தல், ரேஷன் கடைகளில் ஊழல் குறையும். ஆனால் அரைத்த இட்லி, தோசை மாவு கடைகளில் மாவு வேலை உயரும்.


duruvasar
பிப் 17, 2024 09:45

ரேஷன் கடைகளில் வழங்கப்படும்.... அரிசிக்கு மத்திய அரசு கிலோவுக்கு 34 ரூபாயும் தமிழ்நாடு அரசு கிலோவுக்கு 3 ரூபாய் மட்டுமே வழங்குகிறது. உண்மை எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும் என்பது தெரியவில்லை. ஆனால் ஸ்டிக்கர் ஒட்டி திமுகவை விளம்பரப்படுத்திக் கொள்வதில் மட்டும் தான் தமிழக அரசுக்கு கவனம் இருக்கிறது.


Ramesh Sargam
பிப் 17, 2024 08:38

இந்த திருட்டு திமுக அரசு, செயற்கையாக ஒரு தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, ஊழல் செய்து கடையில் அரிசியின் விலையை ஏற்றும்.


Ramesh Sargam
பிப் 17, 2024 08:36

இது எப்படி இருக்கிறது என்றால், அந்த புதிய கிளாம்பாக்கம் பஸ் வளாகத்தில் பஸ் வருமா, வராதா? என்பதை போல உள்ளது. இதெல்லாம் திமுக அரசின் 'சாதனைகள்'. வாக்களித்த மக்களுக்கு 'வேதனைகள்'


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ