உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அப்துல் கலாம் நினைவு நாள்

அப்துல் கலாம் நினைவு நாள்

நெட்டப்பாக்கம் : சூரமங்கலம் தி பாரஸ்ட் பள்ளியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் 9ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.இதையொட்டி, பள்ளி வளாகத்தில் அவரது உருவ சிலைக்கு பள்ளி தாளாளர் சந்தோஷ்சிவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பள்ளி கணித ஆசிரியை ரந்தகுமாரி பேசுகையில், 'நம் வாழ்க்கையில் சூரியனை போல் பிரகாசிக்க சாதனை படைக்க வேண்டும்' என்றார். ஆசிரியர், ஊழியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு அப்துல்கலாம் சிலைக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.ஏற்பாடுகளை தமிழாசிரியர்கள் ரம்யா, சுகந்தி ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ