உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு சாக்லேட்

ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு சாக்லேட்

புதுச்சேரி, : புதுச்சேரியில் ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு போலீசார் பூ மற்றும் சாக்லேட் வழங்கினர்.சாலை விபத்தில் உயிரிழப்புகளை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசு இருசக்கர வாகன ஒட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என, உத்தரவிட்டது. இந்த உத்தரவை பின்பற்றமால் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஹெல்மெட் அணியாமல் செல்கின்றனர்.பொதுமக்களிடம் ஹெல்மெட் அணிந்து செல்வது குறித்து புதுச்சேரி அரசு மற்றும் காவல்துறை பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறது.இந்நிலையில் ராஜிவ் சிக்னல் அருகில்ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் பூக்கள் மற்றும் சாக்லேட் வழங்கி, பொதுமக்கள் அனைவரும் ஹெல்மெட் அணிந்து செல்ல அறிவுறுத்தினர்.இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ