மேலும் செய்திகள்
தீயணைப்பு வீரர்களுக்கு பணி ஆணை வழங்கல்
9 hour(s) ago
பெண்களை கேலி செய்த மேற்கு வங்க வாலிபர் கைது
9 hour(s) ago | 1
திருமண உதவித்தொகை பயனாளிகளுக்கு வழங்கல்
9 hour(s) ago
இந்திய கம்யூ., நகர குழு கூட்டம்
9 hour(s) ago
புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்களில், குருத்தோலை ஞாயிறையொட்டி, சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடந்தது.புதுச்சேரியில் இருதய ஆண்டவர் பசிலிக்கா, ஜென்மராகினி மாதா ஆலயம், கப்ஸ் ஆலயம், நெல்லித்தோப்பு விண்ணேற்பு மாதா ஆலயம், ஆந்திரேயர் ஆலயம், வில்லியனுார் லுார்து அன்னை ஆலயம் உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களிலும் நேற்று காலை குருத்தோலை ஞாயிறு கடைப்பிடிக்கப் பட்டது.இதனையொட்டி, தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடத்தப்பட்டது. கிறிஸ்துவர்கள் குருத்தோலையை கையில் ஏந்தி, 'ஓசன்னா' பாடல்களை பாடி, ஊர்வலமாக சென்றனர்.வரும் 28ம் தேதி புனித வியாழன் அன்று சிறப்பு வழிபாடுகள், சீடர்களின் பாதங்களை கழுவும் சடங்கும் நடைபெறும். புனித வெள்ளியன்று சிலுவையில் அறையப்படும் நிகழ்ச்சியும், ஞாயிற்றுக்கிழமை ஏசுவின் உயிர்ப்பை கொண் டாடும், புனித ஞாயிறு எனும் ஈஸ்டர் பெரு விழாவும் கொண்டாடப்பட உள்ளது.
9 hour(s) ago
9 hour(s) ago | 1
9 hour(s) ago
9 hour(s) ago