உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நீட் அல்லாத பாடப்பிரிவுக்கு கலந்தாய்வு: பெற்றோர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை

நீட் அல்லாத பாடப்பிரிவுக்கு கலந்தாய்வு: பெற்றோர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை

புதுச்சேரி: நீட் அல்லாத பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடத்தக் கோரி முதல்வர், கவர்னருக்கு, புதுச்சேரி மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பாலசுப்ரமணியன் மனு அளித்துள்ளார்.மனுவில், 2024-25ம் கல்வி ஆண்டிற்கான இளநிலை மருத்துவம், படிப்பிற்கான நுழைவுத் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 2024ம் ஆண்டு முதல் செவிலியர் படிப்பிற்கு பொது நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும் என சுகாதரத்துறை அறிவித்துள்ளது. அதற்கான தேர்வு வரும் ஜூலை 14ம் தேதி நடைபெறும் எனவும், அதன்பிறகு முடிவுகள் வெளியிடப்பட்டு, அதற்கு பிற்கு சென்டாக் அரசு ஒதுக்கீட்டில் மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும்.ஆகையால் பொறியியல், விவசாயம், சட்டம், கலை மற்றும் அறிவியில் போன்ற பாடப்பிரிவிற்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசைப் பட்டியல், கல்விக் கட்டணம், சீட் உள்ளிட்ட கலந்தாய்வை புதுச்சேரி மாணவர்கள் பாதிக்காத வகையில் நடத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ