உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஓட்டு எண்ணிக்கையையொட்டி கட்டுப்பாட்டு அறை திறப்பு

ஓட்டு எண்ணிக்கையையொட்டி கட்டுப்பாட்டு அறை திறப்பு

புதுச்சேரி : ஓட்டு எண்ணிக்கையை முன்னிட்டு கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.இது குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரி குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரி லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நாளை காலை 8:00 மணிக்கு, புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் நடக்கிறது. ஓட்டு எண்ணுவதற்கு தேவையான அனைத்த முன் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி பகுதியில் லாஸ்பேட்டையில் அமைந்துள்ள மகளிர் பொறியியல் கல்லுாரி, மோதிலால் நேரு அரசு தொழில்நுட்ப கல்லுாரி வளாகம் ஆகிய இடங்களில் ஓட்டு எண்ணிக்கை மையம் நிறுவப்பட்டுள்ளது.ஓட்டு எண்ணிக்கையை முன்னிட்டு, புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஒரு கட்டுபாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. 0413-2292205 என்ற எண்ணை தொடர்பு கொண்டால் பொதுமக்கள் ஓட்டு எண்ணிக்கை தொடர்பான விபரங்களை தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ