உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முதல்வரை குறைசொல்லுவதா; அங்காளனுக்கு கண்டனம்

முதல்வரை குறைசொல்லுவதா; அங்காளனுக்கு கண்டனம்

புதுச்சேரி : அங்காளன் எம்.எல்.ஏ., தனது தவறுகளை சரி செய்து கொள்ள வேண்டும் என, முன்னாள் எம்.எல்.ஏ., கோபிகா தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: எனக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் சிறப்பாக செயல்படுவேன் என்று சுயேச்சை எம்.எல்.ஏ., அங்காளன் பேசியுள்ளார். கடந்த 2006ல் முதல்வர் ரங்கசாமி, அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்த போது ஏன் செயல்படவில்லை. அமைச்சர் பதவியில் இருந்து அவர் டிஸ்மிஸ் ஆக என்ன காரணம்.வாரிய தலைவர் பதவி பா.ஜ., ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுக்கு வழங்கவில்லை என, கூறும் அங்காளன் எம்.எல்.ஏ., பிப்டிக் சேர்மனாக இருந்தபோது தன்னை தேர்ந்தெடுத்து அனுப்பிய தொகுதி இளைஞர்கள், பெண்கள் எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்தார் என்பதை சொல்ல முடியுமா.2021 சட்டசபை தேர்தலில் திருபுவனை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட அங்காளன், முதல்வர் ரங்கசாமிக்கு தான் ஆதரவு தருவேன் என்று கூறியதால் வெற்றி பெற்றார். பிறகு ஏன் அவர் முதல்வரை சந்திக்கவில்லை.ஆறு மாதத்துக்கு ஒருவரை ஆதரவாளராக ஏற்றுக் கொண்டு செயல்படும் அங்காளன் எம்.எல்.ஏ., பாரபட்சமின்றி ஆட்சி நடத்தும் முதல்வர் ரங்கசாமியை குறை கூறுவதை விட்டு விட்டு தனது தவறுகளை சரி செய்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர், தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை