உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திரவுபதி அம்மன் கோவிலில் நாளை தீமிதி உற்சவம்

திரவுபதி அம்மன் கோவிலில் நாளை தீமிதி உற்சவம்

அரியாங்குப்பம்: முருங்கப்பாக்கம் திரவுபதி அம்மன் கோவிலில் பிரம்மோற்சவ விழாவையொட்டி, நாளை தீமிதி திருவிழா நடக்கிறது.முருங்கப்பாக்கம் திரவுபதி அம்மன் கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 15ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம் அம்மனுக்கு தீபாராதனை, கரக திருவிழா நடந்தது. தொடர்ந்து, மாலை 5:00 மணியவில் பகாசூரன் வதம் நிகழ்ச்சி நடந்தது. நேற்று அம்மன் வீதியுலா வந்து அருள்பாலித்தார். நாளை மதியம் 12:00 மணியளவில் படுகள நிகழ்ச்சி, தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு தீமிதி திருவிழா நடக்கிறது. வரும் 1ம் தேதி தெப்ப உற்சவம், 7ம் தேதி இரவு 7:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை