உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 23ம் தேதி வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் மீன்வள துறை இயக்குனர் எச்சரிக்கை

23ம் தேதி வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் மீன்வள துறை இயக்குனர் எச்சரிக்கை

புதுச்சேரி: கட்டுமர மீன்பிடி படகு மீனவர்கள் வரும் 23ம் தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை எச்சரித்துள்ளது.இது குறித்து புதுச்சேரி மீன் வளத் துறை இயக்குனர் முகமது இஸ்மாயில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தற்போதைய அறிக்கையின் படி வளிமண்டலத்தில் தென்மேற்கில் இருந்து காற்றின் வேகம் 20 நாட்டிகல் வேகத்திற்கு அதிகரித்துள்ளது.மேலும் மற்ற வானிலை நிகழ்வுகளால் தென்மேற்கு பருவமழை அந்தமான், மாலத்தீவு பகுதிகளில் நிலைகொண்டுள்ளது.இதன் காரணமாக மே 20 ந் தேதி முதல் கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று வீசி வருகின்றது.வரும் 23ம் தேதி வரை தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசும்.எனவே, வட தமிழக கடற்கரையையொட்டிய பகுதிகளில் கடல் சீற்றத்துடன் இருக்கும் என்பதாலும் மறு அறிவிப்பு வரும் வரை புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த கட்டுமர மீன்பிடி மீனவர்கள் எவரும் கடலுக்கு செல்ல வேண்டாம்.மீன்பிடி விசைப்படகுகள், மோட்டார் பொருத்தப்பட்ட பைபர் படகுகள் மற்றும் சுருக்கு வலை மீன்பிடி படகுகளுக்கு மீன்பிடி தடை காலம் என்பதால் அவர்களுக்கு தடை ஏற்கனவே அமலில் உள்ளது.ஆகவே புதுச்சேரி, காரைக்கால் பகுதியைச் சேர்ந்த கட்டுமர மீன்பிடி படகு மீனவர்கள் வரும் 23ம் தேதி வரை கடலுக்குள் செல்ல வேண்டாம். இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை