உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / டிராக்டர் மோதி மீனவர் பலி

டிராக்டர் மோதி மீனவர் பலி

காரைக்கால், : படகை கடலில் இறக்கும் போது கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் மோதி மீனவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். காரைக்கால் கீழகாசாகுடி சுவாமி நகரை சேர்ந்தவர் குப்புசாமி,69; இவர் மீன்பிடி கூலிவேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் மீன்பிடி படகை கடலில் இறக்கும் பணி நடைபெற்றது. இதில் கடலில் படகை டிராக்டர் மூலம் இறக்கும்போது கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் மணல் பரப்பில் உட்கார்ந்து மீன்பிடித்த குப்புசாமி மேல் மோதியதில் பலத்த காயம் அடைந்தார்.உடன் அவரை அருகில் இருந்தவர்கள் தனியார் மருந்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் அவர் இறந்தார்.புகாரின் பேரில் நகர போக்குவரத்து போலீசார் டிராக்டர் ஒட்டுநர் கீழகாசாகுடியை சேர்ந்த சரவணன்,45; மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை