உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதிய மின்மாற்றி இயக்கி வைப்பு

புதிய மின்மாற்றி இயக்கி வைப்பு

அரியாங்குப்பம், : தவளக்குப்பம் அருகே ரூ. 15 லட்சம் மதிப்புள்ள புதிய மின்மாற்றியை சபாநாயகர் செல்வம் திறந்து வைத்தார்.தவளக்குப்பம் அடுத்த தானாம்பாளையம் ஆனந்தம் நகரில் குறைந்த மின் அழுத்தம் மின்சாரம் இருந்து வந்தது. இதனால், சப்தகிரி நகர், வெங்கடேஸ்வரா நகர், காசன்திட்டு உள்ளிட்ட பகுதியில் குடியிருக்கும் மக்கள் அவதிப்பட்டு வந்தனர். புதிய டிரான்ஸ்பார்மர் அப்பகுதியில் அமைக்க கோரி மக்கள் தொகுதி எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை வைத்தனர்.சபாநாயகர் செல்வம் அதற்கான முயற்சி எடுத்து, டிரான்ஸ்பார்மர் வாங்குவதற்கு மின்துறை மூலம் 15 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. நேற்று 315 திறன் கொண்ட புதிய டிரான்ஸ்பார்மரை சபாநாயகர் செல்வம் இயக்கி வைத்தார். நிகழ்ச்சியில், செயற்பொறியாளர் செல்வி, உதவிப் பொறியாளர் சக்திவேல், தவளக்குப்பம் இளநிலை பொறியாளர் திருமுருகன் உட்பட மின் துறை அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை