உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / லாரி டிரைவரிடம் மொபைல் பறிப்பு

லாரி டிரைவரிடம் மொபைல் பறிப்பு

புதுச்சேரி : லாரியை வழிமறித்து டிரைவரிடம் பணம், மொபைல் போனை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.லாஸ்பேட்டை ஜீவானந்தபுரம் எம்.ஜி.ஆர்.வீதியைச் சேர்ந்தவர் கார்த்திக், 29; டிரைவர். இவர் நேற்று அதிகாலை 1:30 மணியளவில் டி.என்.18. ஏகீயு 2651 பதிவு எண் கொண்ட டாரஸ் லாரியில், சேதாரப்பட்டு சென்று கொண்டிருந்தார்.அதிகாலை 3:30 மணியளவில் துத்திப்பட்டு சிமென்ட் கம்பனி சென்றபோது, பைக்கில் வந்த மர்ம நபர் லாரியை வழிமறித்து, கார்த்திக்கிடம் இருந்து ஜிபே மூலம் 2,800 ரூபாய் மற்றும் 28 ஆயிரம் மதிப்பிலான மொபைல் போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார். கார்த்திக் புகாரின் பேரில் சேதராப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து, போனை பறித்துச் சென்ற நபரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி