உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கடற்கரையில் கிராணைட் இருக்கைகள் உடைப்பு மர்ம நபர்கள் மீது போலீஸ் வழக்கு பதிவு 

கடற்கரையில் கிராணைட் இருக்கைகள் உடைப்பு மர்ம நபர்கள் மீது போலீஸ் வழக்கு பதிவு 

புதுச்சேரி: கடற்கரையில் கிராணைட் கற்களால் ஆன இருக்கைகளை அடித்து உடைத்த மர்ம நபர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.புதுச்சேரி, கடற்கரை சாலையில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு திட்ட பணிகள் நடக்கிறது. கடற்கரை வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கரையோரம் அமர்ந்து கடலின் அழகை ரசிக்கும் வகையில், கிராணைட் கற்களால் ஆன இருக்கைகள் சுற்றுலாத்துறை மூலம் பொதுப்பணித்துறை அமைத்துள்ளது.மூன்று பேர் அமர கூடிய இருக்கைகள் சீகல்ஸ் உணவகம் துவங்கி பழைய சாராய ஆலை வரை அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இருக்கையும் ரூ.40 ஆயிரம் மதிப்பு கொண்டது.கடந்த 15ம் தேதி கடற்கரையில் குவிந்த சில மர்ம கும்பல், சீகல்ஸ் உணவகம் அருகில் கிராணைட் கற்களால் அமைக்கப்பட்டு இருந்த 10க்கும் மேற்பட்ட இருக்கைகளை உடைத்தனர். கிராணைட் இருக்கைகள் உடைக்கப்பட்டு கிடக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. இதைத் தொடர்ந்து, பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் சண்முகசுந்தரம் ஒதியஞ்சாலை போலீசில் புகார் அளித்தார். பொது சொத்துக்களை சேதப்படுத்துதல் பிரிவின் கீழ் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை