உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சந்தனக்கட்டை பறிமுதல் வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்ற கோரிக்கை

சந்தனக்கட்டை பறிமுதல் வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்ற கோரிக்கை

புதுச்சேரி:'புதுச்சேரியில் சந்தன கட்டை மற்றும் சந்தன மரத்துாள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கை, சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற வேண்டும்' என, முன்னாள் முதல்வர் நாராயணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து, நாராயணசாமி கூறியதாவது:புதுச்சேரியில் 6.2 டன் சந்தனக் கட்டை மற்றும் சந்தன மரத்துாள் தமிழக வனத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனம் உரிய அனுமதி பெற்றுள்ளதா என்பதை அரசு தெரிவிக்க வேண்டும். இதில் கேரளா, தமிழகம், புதுச்சேரி ஆகிய 3 மாநிலங்கள் சம்பந்தப்பட்டுள்ளதால் சி.பி.ஐ., விசாரணைக்கு வழக்கை மாற்ற வேண்டும் .இதில் எங்களுக்கு சம்பந்தம் இல்லை என்று சொல்லி புதுச்சேரி அரசு தட்டி கழிக்க முடியாது. ஏனென்றால் புதுச்சேரியில் தான் சந்தன ஆயில் தயாரிப்பு தொழிற்சாலை செயல்பட்டுள்ளது. எத்தனை டன் சந்தனக் கட்டைகள், துாள்கள் பிற மாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்பதை எல்லாம் விசாரிக்க வேண்டும்.இதுதொடர்பான தெளிவான அறிக்கையை புதுச்சேரி மக்கள் மத்தியில் அரசு வெளியிட வேண்டும். இந்த தொழிற்சாலை பதிவு செய்யப்பட்டுள்ளதா, சந்தன ஆயில் எடுக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதா என்ற விளக்கம் மக்களுக்கு தெரிய வேண்டும். ஒரு அமைச்சரின் மகளுக்கு சொந்தமான இடம் என்பதால் இந்த பிரச்னை பெரியதாகியுள்ளது. உரிய அனுமதி பெற்றதால் தான் அனுமதி கொடுத்திருக்க வேண்டும்.தமிழக அரசுடன் பேசி இவ்விவகாரத்தில், சி.பி.ஐ.,விசாரணைக்கு புதுச்சேரி அரசு பரிந்துரை செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி