உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சாலையோர ஆக்கிரமிப்பு அதிரடியாக அகற்றம்

சாலையோர ஆக்கிரமிப்பு அதிரடியாக அகற்றம்

நெட்டப்பாக்கம் : நெட்டப்பாக்கம் - கரியமாணிக்கம் சாலையில், சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அதிரடியாக அகற்றப்பட்டது.நெட்டப்பாக்கம் - கரியமாணிக்கம், மதகடிப்பட்டு சாலை போக்குவரத்து மிகுந்ததாக உள்ளது. சாலை ஒரங்களில் ஆக்கிரமித்து பேனர்கள் ெஷட்டு அமைக்கப்பட்டு கடைகள் நடத்தி வருவதால், அடிக்கடி விபத்து நடந்து வந்தது.இதுகுறித்து பொதுமக்கள் பாகூர் தாசில்தார் அலுவலகத்திற்கு புகார் தெரிவித்தனர். இதையடுத்து பாகூர் தாசில்தார் கோபாலகிருஷ்ணன், நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் முன்னிலையில் நேற்று காலை 10:00 மணியளவில் கரியமாணிக்கம் - நெட்டப்பாக்கம் சாலையை ஆக்கிரமித்து இருபுறமும் கட்டியிருந்த கடைகள், பேனர்களை ஜே.சி.பி., இயந்திரம் மூலம் அகற்றும் பணி நடந்தது.நெட்டப்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்னர். கடை பேனர்களை சாலையோரம் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உரிமையாளர்களை அதிகாரிகள் எச்சரித்தனர்.பொதுப்பணிததுறை பொறியாளர் கிருஷ்ணன், கொம்யூன் பஞ்சாயத்து செயற்பொறியாளர் ராமலிங்கேஸ்வரராவ், இளநிலை பொறியாளர் அய்யப்பன், வருவாய் ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை