உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 5 பேரிடம் ரூ.1.18 லட்சம் அபேஸ்

5 பேரிடம் ரூ.1.18 லட்சம் அபேஸ்

புதுச்சேரி: புதுச்சேரி, ஆலங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி. இவரை தொடர்பு கொண்ட நபர், ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே அதிக பணம் சம்பாதிக்காலம் என, கூறினார். அதை நம்பி அவர் 30 ஆயிரம் முதலீடு செய்து ஏமாந்தார்.அதேபோல், புதுச்சேரி கவுசல்யா என்பவர் 50 ஆயிரம் ரூபாய் அனுப்பி ஏமாந்தார். முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த சரவணன் என்பவரின் வங்கி கணக்கில் 13 ஆயிரம் பணத்தை அவருக்கு தெரியாமல் எடுத்துள்ளனர்.ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த அபி என்பவரிடம் மின்துறை அதிகாரி போல மர்ம நபர் ஒருவர் பேசினார். மின்துறை நுகர் வோர் விபரங்களை கேட்பது போல, வங்கி விபரங்கள் கேட்டுள்ளார். அவரது மொபைலுக்கு வந்த ஓ.டி.பி., எண்ணை வாங்கிய அடுத்த நிமிடத்தில், அவரது வங்கி கணக்கில் இருந்து 15 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டது. அபிேஷகப்பாக்கத்தை சேர்ந்த ஹேமா கம்ப்யூட்டர் வாங்குவதற்கு டெலிகிராம் ஆப் மூலம் 10 ஆயிரம் ரூபாய் அனுப்பி ஆர்டர் செய்த நிறுவனம் போலியானது என தெரிய வந்தது. சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை