உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கதிர்வேல் சுவாமி கோவிலில் அம்மனுக்கு திரு விளக்கு பூஜை

கதிர்வேல் சுவாமி கோவிலில் அம்மனுக்கு திரு விளக்கு பூஜை

புதுச்சேரி: கதிர்வேல் சுவாமி கோவிலில் காமாட்சி அம்மனுக்கு நடந்த திரு விளக்கு பூஜையில் ஏராளமானோர் பங்கேற்றனர். கதிர்காமம், கதிர்வேல் சுவாமி கோவிலில், காமாட்சி அம்மனுக்கு, 29,ம் ஆண்டு திரு விளக்கு பூஜை நேற்று நடந்தது. ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி, காமாட்சி அம்மனுக்கு நேற்று காலை, 10:00 மணிக்கு மகா அபிேஷகம் நடந்தது. இதையடுத்து மாலை 6:00 மணிக்கு மகாலட்சுமி பூஜை எனும், திரு விளக்கு பூஜையும் நடந்தது. இந்த வழிபாட்டில் பெண்கள் குத்து விளக்கு, பஞ்ச பாத்திரம், மணி, தட்டு, உள்ளிட்டவைகளோடு பங்கேற்று, அம்மனுக்கு பூஜை செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி இளங்குமரன் உள்ளிட்டோர் மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ