உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முத்தியால்பேட்டை போலீசார் உட்பட 21 பேர் இடமாற்றம்

முத்தியால்பேட்டை போலீசார் உட்பட 21 பேர் இடமாற்றம்

புதுச்சேரி; முத்தியால்பேட்டை 12 போலீஸ்காரர்கள் உட்பட 21 பேர் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டனர்.புதுச்சேரி, சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில், துவக்கத்தில் சரியான முறையில் போலீசார் விசாரிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் முத்தியால்பேட்டை இன்ஸ்பெக்டர், சப்இன்ஸ்பெக்டர், 16 ஏட்டு, கான்ஸ்டபிள்கள் நேற்று முன்தினம் பல்வேறு காவல் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.அவர்களை தொடர்ந்து முத்தியால்பேட்டை, சோலை நகர் காவல் நிலையத்தில் பணியாற்றிய 12 போலீஸ்காரர்கள் உட்பட 21 பேர் நேற்று பல்வேறு காவல் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். சமீபத்தில் பதவி உயர்வு பெற்ற 4 சப்இன்ஸ்பெக்டர்களுக்கு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்