உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  மூதாட்டியிடம் 22 சவரன் நகை,பணம் நுாதன முறையில் திருட்டு

 மூதாட்டியிடம் 22 சவரன் நகை,பணம் நுாதன முறையில் திருட்டு

புதுச்சேரி: நெல்லித்தோப்பில் மூதாட்டியிடம் நுாதனமுறையில் 22 சவரன் நகை மற்றும் பணத்தை திருடிசென்ற 2 பெண்களை போலீசார் தேடிவருகின்றனர். புதுச்சேரி குயவர்பாளையம், திருமால் நகரை சேர்ந்தவர் செல்வராஜ் மனைவி ரங்கநாயகி, 78; இவரது கணவர் செல்வராஜ் கடந்த 2018 ம் ஆண்டு இறந்து விட்டார். இவரது 3 மகள்களில் ஒருவர் இறந்த நிலையில், 2 மகள்கள் திருமணம் செய்து கொண்டு, பிரான்ஸ் நாட்டில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். தனியாக வசித்து வரும் ரங்கநாயகி, காசிக்கு செல்ல முடிவு செய்து, அதற்காக, தன்னிடம் இருந்த 22 சவரன் நகை, ரூ.1.10 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை, தனது மகளின் தோழியும், குடும்ப நண்பருமான நெல்லித்தோப்பு, சவரிபடையாட்சி வீதியில் உள்ள பாத்திமாஎன்பவரிடம் கடந்த செப்டம்பர் 8 ம் தேதி கொடுத்து விட்டு, 10ம் தேதி காசிக்கு ரயில் மூலம் புறப்பட்டு சென்றார். பின், 24ம் தேதி தேதி மீண்டும் வீட்டிற்கு வந்த ரங்கநாயகி, நேற்று முன்தினம் (24ம் தேதி) மாலை பாத்திமா வீட்டிற்கு சென்று தான் கொடுத்து வைத்திருந்த 22 சவரன் நகை மற்றும் பணத்தை வாங்கி, சிறிய தாம்பூல துணிப்பையில் வைத்து, தான் எடுத்து சென்ற ஜோல்னா பையினுள் வைத்து கொண்டு, வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். நெல்லித்தோப்பு சிக்னலுக்கு நடந்து வந்த ரங்கநாயகி சாலையை கடக்க முயன்றார். அப்போது அங்கிருந்த 30 வயது மதிக்கத்தக்க 2 பெண்கள், ரங்கநாயகியை அணுகி பேச்சு கொடுத்துள்ளார். அப்போது, அவர்கள் ரங்கநாயகியிடம் ஜோல்னா பை பெரிதாக உள்ளதே என்ன வைத்துள்ளீர்கள் என கேட்டுள்ளனர். அதற்கு, ரங்கநாயகி வெகுளியாக பையில் தனது நகைகளை வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். பின், ரங்கநாயகியிடம் சாலையை கடக்க உதவி செய்வதாக கூறிய அந்த பெண்கள், அவரை இருபுறமும் அனைத்தபடி அழைத்து வந்து, திருவள்ளுவர்சாலை சந்திப்பு தனியார் ஹோட்டல் அருகே விட்டு விட்டு சென்றனர். அந்த பெண்களுடன் மேலும் 3 சிறுவர்கள் இருந்துள்ளனர். அவர்கள்சென்றபின், தன்னிடம் இருந்த ஜோல்னா பையை ரங்கநாயகி சோதனை செய்தபோது, அதிலிருந்த22 சவரன் நகை, ரூ.1.10 லட்சம் ரொக்கம் வைக்கப்பட்டிருந்ததாம்பூல துணிப்பை காணாமல் அதிர்ச்சியடைந்தார். ரங்கநாயகி புகாரின் பேரில் உருளையன்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி., கேமரா காட்சிகளை பார்வையிட்டு, மூதாட்டியிடம் நகை மற்றும் பணத்தை திருடி சென்ற பெண்களை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை