உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போதை பொருள் விற்பதை தடுக்காவிட்டால் அ.தி.மு.க., தொடர் போராட்டம் நடத்தும்

போதை பொருள் விற்பதை தடுக்காவிட்டால் அ.தி.மு.க., தொடர் போராட்டம் நடத்தும்

புதுச்சேரி: புதுச்சேரியில் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சிறுமிக்கு நீதி கேட்டும், போதைபொருள் விற்பனை தடுக்காத மாநில அரசை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் பந்த் போராட்டம் நேற்று நடந்தது.உப்பளம் அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் இருந்து பைக் பேரணியாக சென்ற அ.தி.மு.க.,வினர் ஒதியஞ்சாலை சிக்னலில் அமர்ந்து மறியலில் ஈடுப்பட்டனர். மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார்.அவை தலைவர் அன்பானந்தம், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பாஸ்கர், ராஜாராமன், கோமலா, இணை செயலாளர் கணேசன், திருநாவுக்கரசு, பொரு ளாளர் ரவிபாண்டுரங்கன் உட்பட பலர் பங்கேற்றனர்.போராட்டத்தின்போது அன்பழகன் கூறியதாவது;பாலியல் பலாத்காரம் செய்து சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது. இந்திய அளவில் புதுச்சேரிக்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது. இச்செயலுக்கு அரசு முழு பொறுப்பேற்க வேண்டும். குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் அனைத்தும் புதுச்சேரியில் தடையின்றி கிடைக்கிறது.போதை பொருள் தடுக்க அரசு எந்த வித நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. புதுச்சேரி முழுதும் ரெஸ்டோபார் என்ற பெயரில் அதிகாலை 3:00 மணி வரை ஆபாச நடனம் நடக்கிறது.போதை பொருள் விற்பனையை தடுத்து நிறுத்தாவிட்டால், தொடர் போராட்டங்கள் நடக்கும்' என்றார். மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட 24 பெண்கள் உட்பட 140 பேர் கைது செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை