உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சட்டசபை லிப்ட் ஆபரேட்டர் துாக்குபோட்டு தற்கொலை

சட்டசபை லிப்ட் ஆபரேட்டர் துாக்குபோட்டு தற்கொலை

புதுச்சேரி: பணி நிரந்தம் செய்யாததால் புதுச்சேரி சட்டசபை லிப்ட் ஆப்ரேட்டர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். புதுச்சேரி சாரம், கவிக்குயில் நகரை சேர்ந்தவர் ராஜா (எ) செல்வம், 44; மாற்றுத் திறனாளியான இவர் கடந்த 15 ஆண்டுகளாக சட்டசபையில் லிப்ட் ஆப்ரேட்டராக பணி செய்து வந்தார்.இவர் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி நீண்ட நாட்களாக அரசிடம் கோரிக்கை வைத்து வந்தார். பணி நிரந்தரம் செய்யாததால், அவர் விரக்தியில் இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று வீட்டில், துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு காமாட்சி என்ற வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி மனைவியும், மற்றும் ஒரு மகள், மகன் இருக்கின்றனர்.இதுகுறித்து, ராஜாவின் தம்பி சங்கர் கொடுத்த புகாரின் பேரில் டி.நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை