உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / எப்.டி.டி.எச்., இணைப்பாக தரம் உயர்த்த பி.எஸ்.என்.எல்., அழைப்பு

எப்.டி.டி.எச்., இணைப்பாக தரம் உயர்த்த பி.எஸ்.என்.எல்., அழைப்பு

புதுச்சேரி: லேண்ட்லைன், பிராட்பேண்ட் இணைப்பை எப்.டி.டி.எச்., இணைப்பாக தரம் உயர்த்திக்கொள்ளலாம் என பி.எஸ்.என்.எல்., அறிவித்துள்ளது.இது குறித்து பி.எஸ்.என்.எல்., முதன்மை பொதுமேலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:பாரத அரசின் டிஜிட்டல்மயமாக்கல் கொள்கை அடிப்படையில் பி.எஸ்.என்.எல்., நிறுவனம் தற்போதுள்ள தரை வழி தொலைபேசி மற்றும் பிராட்பேண்ட் இணைப்புகள் அனைத்தையும் அதிவேக கண்ணாடி இழை அடிப்படையிலான எப்.டி.டி.எச்., சேவையாக மேம்படுத்தப்படும். இதனால் தொலைபேசி எண் மாறாது. இதற்கு தேவையான மோடம் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.பி.எஸ்.என்.எல்., எப்.டி.டி.எச்., ரூ.329 முதல் பல்வேறு மாதாந்திர திட்டங்களில் உள்ளது. கிராமப்புறங்களுக்கு ஆறு மாதத்திற்கு ரூ.999 திட்டமும் உள்ளது. இந்த சலுகைகளை பயன்படுத்தி லேண்ட்லைன் மற்றும் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்கள் மார்ச் 31ம் தேதிக்குள் இணைப்புகளை தரம் உயர்த்திக்கொள்ளலாம்.மேலும், லேண்ட்லைன் மற்றும் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்கள் தங்களது இணைப்பை எப்.டி.டி.எச்., இணைப்பாக தரம் உயர்த்த 0413-2345555, 2221706 ஆகிய தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி