உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பால் கறவை இயந்திரம் முதல்வர் வழங்கல்

பால் கறவை இயந்திரம் முதல்வர் வழங்கல்

புதுச்சேரி : கால்நடைத்துறை மூலம் பால் உற்பத்தி பயனாளிகளுக்கு விலையில்லா பால் கறவை இயந்திரங்களை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.புதுச்சேரி மாநிலத்தில் சுத்தமான பால் உற்பத்தியை அதிகரிக்கவும், பால் உற்பத்தியில் மனித ஆற்றல் பற்றாக்குறை நீக்கிடவும், எளிய முறையில் பால் கறவை செய்திடவும், முதல் முறையாக பால் கறவை இயந்திரங்களை அறிமுகப்படுத்தப்படும் திட்டத்தை பட்ஜெட்டில் கால்நடைத்துறை அமைச்சர் அறிவித்தார்.இத்திட்டத்திற்காக 1 கோடியே 23 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு, கால்நடை துறை மூலம் விண்ணப்பம் வினியோகம் செய்யப்பட்டு, அதிலிருந்து தகுதி வாய்ந்த 294 பயனாளிகள் தேர்வு செய்து, அவர்களுக்கு, ரூ. 42 ஆயிரம் மதிப்பிலான பால் கறவை இயந்திரங்களை நுாறு சதவீதம் மானியத்தில் பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி சட்டசபையில் நடந்தது.கால்நடைத்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் ரங்கசாமி பால் கறவை இயந்திரங்களை பயனாளிகளுக்கு வழங்கினார். கால்நடைத்துறை இயக்குனர், கால்நடை மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை