உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சிறை கைதிகளுக்கு கண் பரிசோதனை

சிறை கைதிகளுக்கு கண் பரிசோதனை

புதுச்சேரி : காலப்பட்டு மத்தியச் சிறையில் உள்ள கைதிகளுக்கு கண் பரிசோதனை சிறப்பு முகாம் நடந்தது.புதுச்சேரி காலாப்பட்டில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு 300க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். தேசிய பல் சுகாதார திட்டம் மற்றும் தேசிய பார்வை இழப்பு தடுப்பு கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ், காலாப்பட்டு சிறை கைதிகளுக்கு மருத்துவ முகாம் நடந்தது.முகாமில் சுகாதார திட்ட அலுவலர் தணிகாசலம் தலைமையில் திட்ட ஒருங்கிணைப்பாளர் கவிப்பிரியா மற்றும் மருத்துவக்குழுவினர்கள், 100க்கும் மேற்பட்ட கைதிகளுக்கு பல் மற்றும் கண் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.இதில் சிறை தலைமை கண்காணிப்பாளர் அழகேசன், சூப்பிரண்டு பாஸ்கரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ