உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு

உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு

பாகூர் : பாகூரில் நடத்திய சோதனையில் காலாவதியான உணவு பொருட்களை உணவு பாதுகாப்பு அதிகாரி பறிமுதல் செய்தார்.பாகூரில் மளிகை கடை, சூப்பர் மார்கெட், உணவகம் என 50க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகிறது. இங்குள்ள, ஒரு மளிகை கடையில் காலாவதியான உணவு பொருள் விற்பனை செய்யப்பட்டதாக உணவு பாதுகாப்பு துறைக்கு வாட்ஸ் ஆப் மூலமாக புகார் சென்றுள்ளது.இதையடுத்து, புதுச்சேரி உணவு பாதுகாப்பு அதிகாரி ரவிச்சந்திரன், அந்த மளிகை கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.அதில், காலாவதியான கோதுமை பாக்கெட், தேன், மிட்டாய்கள் மற்றும் குளிர்பானங்கள் உள்ளிட்ட உணவு பொருட்களை கண்டறிந்து பறிமுதல் செய்யப்பட்டது.மேலும், உணவு உரிமம் இல்லாமல் விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர் மீது வழக்குப் பதிந்து உரிமம் இல்லாமல் விற்பனை செய்து வந்ததற்கும், காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததற்கும் அபராதம் விதிக்க உள்ளதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ரவிச்சந்திரன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி