உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி: நேஷனல் பள்ளி முதலிடம்

 ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி: நேஷனல் பள்ளி முதலிடம்

பாகூர்: வட்ட அளவிலான ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில், தவளக்குப்பம் நேஷனல் ஆங்கில உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இடையே வட்ட அளவிலான 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான ஹாக்கி போட்டி, குருவிநத்தம் அரசுப் பள்ளி மைதானத்தில் நடந்தது. போட்டியில் 10க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. இப்போட்டியில், தவளக்குப்பம் நேஷனல் ஆங்கில உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்து, சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றனர். வட்ட அளவிலான ஹாக்கி சாம்பியன்ஷிப்பில் முதலிடம் பெற்ற சாதனை படைத்த மாணவர்களுக்கான பாராட்டு விழா நேஷனல் பள்ளி வளாாகத்தில் நடந்தது. இதில், பள்ளி சேர்மன் கிரண்குமார், தாளாளர் எழிலரசி கிரண்குமார் ஆகியோர் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற மாணவர்களை பாராட்டினர். தலைமை ஆசிரியர் உமா வாழ்த்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை