உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தனியார் நிறுவன ஊழியர் மாயம்

தனியார் நிறுவன ஊழியர் மாயம்

புதுச்சேரி : உறுவையாறு, மங்கலம் மெயின்ரோடு, நத்தமேடு தெருவைச் சேர்ந்தவர் நாகம்மாள். இவரது மகன் கோவிந்தன், 40; தனியார் கம்பெனி ஊழியர். குடிப்பழக்கம் உடையவர். கடந்த 4ம் தேதி வயிற்று வலி காரணமாக கதிர்காமம் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவமனையில் உடன் இருந்த மனைவி எழிலரசியுடன் தகராறு ஏற்பட்டதால் கோவிந்தன் மருத்துவமனையில் இருந்து வெளியேறினார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக கோரிமேடு போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி