| ADDED : ஜன 07, 2024 04:57 AM
புதுச்சேரி: மகளிர் கிரிக்கெட் போட்டியில், பலம் வாய்ந்த கர்நாடக அணியை 35 ரன்கள் வித்யாசத்தில் வீழ்த்தி, புதுச்சேரி அணி அபார வெற்றி பெற்றது.இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் கீழ் நடத்தும் மகளிர்களுக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி பல்வேறு மாநிலங்களில் நடந்து வருகிறது. இதில், ஓடிசா மாநிலத்தில் நடந்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் பலம் வாய்ந்த கர்நாடகா மகளிர் அணியும், புதுச்சேரி மகளிர் அணியும் நேற்று மோதின. டாஸ் வென்ற புதுச்சேரி மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்தது. புதுச்சேரி அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து, 210 ரன்கள் எடுத்தது. இந்த அணியின் கவிஷா 76 பந்துகளில் 46 ரன், சயாலி லோங்கர் 85 பந்துகளில் 72 ரன் எடுத்தனர்.தொடர்ந்து, ஆடிய கர்நாடகா மகளிர் அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 175 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.புதுச்சேரி அணியின் ஆஷா சிறப்பாக பந்து வீசி, 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் பலம் வாய்ந்த கர்நாடகா மகளிர் அணியை, புதுச்சேரி மகளிர் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.