உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சிட்பண்ட் ஊழியர் மர்ம சாவு

சிட்பண்ட் ஊழியர் மர்ம சாவு

விருத்தாசலம் : விருத்தாசலம் பனிபூண்டார் வீதியை சேர்ந்தவர் ராஜேஷ்குமார், 37; நெய்வேலியில் உள்ள சிட்பண்ட்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்தார்.கடந்த 31ம் தேதி புத்தாண்டு கொண்டாட்டத்திற் காக, தனது நண்பர் வெங்க டேசன் என்பவருடன் புதுச்சேரிக்கு பைக்கில் சென்ற ராஜேஷ்குமார் நேற்று முன்தி னம் இரவு திரும்பி வந்தார்.அப்போது, காய்கறி வாங்க வெளியே சென்ற அவரது மனைவி கிருபாவதி வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் படிக்கட்டில் ராஜேஷ்குமார் மயங்கிய நிலையில் கிடந்தார். உடன் அவரை, மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தார்.புகாரின்பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ